உள்ளடக்கத்துக்குச் செல்

குண்ட இலட்சுமி தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குண்ட இலட்சுமி தேவி
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை
பதவியில்
2014–2019
முன்னையவர்தர்ம பிரசாத் ராவ்
பின்னவர்தர்ம பிரசாத் ராவ்
தொகுதிஸ்ரீகாகுளம் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஸ்ரீகாகுளம்
1961
இறப்புஸ்ரீகாகுளம்
இளைப்பாறுமிடம்ஸ்ரீகாகுளம்
அரசியல் கட்சிதெலுங்கு தேசம் கட்சி
(2014 முதல்)
துணைவர்குண்ட அப்பால சூரியநாராயணா
பெற்றோர்
  • நிக்கு அப்பாலாசுவாமி நாயுடு (தந்தை)
பணிஅரசியல்வாதி

குண்ட இலட்சுமி தேவி (Gunda Lakshmi Devi) ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2014 முதல் 2019 வரை ஸ்ரீகாகுளம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து ஆந்திரப் பிரதேசச் சட்டமன்றத்தின் உறுப்பினராகப் பணியாற்றினார்.[1][2] 2024 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இவருக்குத் தெலுங்கு தேசம் கட்சி வாய்ப்பினை வழங்கவில்லை.[3] கட்சியின் இந்த முடிவைத் தொடர்ந்து, இவருடைய ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.[4] சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடப் போவதாக தேவி அறிவித்தார்.[5][6][7]

இளமை

[தொகு]

ஸ்ரீகாகுளத்தைச் சேர்ந்தவர் தேவி. இவர் வேலமா சமூகத்தைச் சேர்ந்தவர். இவருடைய கணவர் குண்டா அப்பலா சூர்யநாராயணனைத் தொடர்ந்து அரசியலில் நுழைந்து 2014 தேர்தலில் அறிமுகமானார்.[8] இவரின் மகன் அமெரிக்காவில் குடியேறியுள்ளார்.

அரசியல்

[தொகு]

தேவி, 2014 ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியின் தர்மன பிரசாத ராவை 24,131 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.[9]

முன்னதாக, ஸ்ரீகாகுளம் நகராட்சி துணைத் தலைவராகவும், தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Andhra Pradesh [2014 Onwards] District Srikakulam Vidhan Sabha Election results". www.indiavotes.com (in ஆங்கிலம்).
  2. "నాగావళి తీరాన.. ఎటువైపో ఓటరన్న..! | Sakshi". www.sakshi.com (in தெலுங்கு). Retrieved 2024-05-16.
  3. "TDP high command trying to cool down supporters of Gunda Lakshmi Devi, Venkata Ramana" (in en-IN). https://www.thehindu.com/news/national/andhra-pradesh/tdp-high-command-trying-to-cool-down-supporters-of-gunda-lakshmi-devi-venkata-ramana/article68002813.ece. 
  4. 4.0 4.1 Correspondent, D. C. (2024-03-22). "Ex-MLA's followers ransack TD office in Srikakulam". Deccan Chronicle (in ஆங்கிலம்). Retrieved 2024-05-16. {{cite web}}: |last= has generic name (help)
  5. "Gunda Lakshmi Devi vows to contest elections as an independent from Srikakulam" (in en-IN). https://www.thehindu.com/news/national/andhra-pradesh/gunda-lakshmi-devi-vows-to-contest-elections-as-an-independent-from-srikakulam/article67984208.ece. 
  6. Rao, Chowdari Lakshmana (2024-05-15). "Srikakulam: Etcherla registers highest polling percentage of 87". www.thehansindia.com (in ஆங்கிலம்). Retrieved 2024-05-16.
  7. Desam, A. B. P. (2024-03-23). "రామ్మోహన్, అచ్చెన్న, రవికూమార్‌పై పోటీకి సిద్ధమవుతున్న కలమట, గుండ వర్గీయులు". telugu.abplive.com (in தெலுங்கு). Retrieved 2024-05-16.
  8. Pativada, Sreenu Babu (2024-03-29). "Unlike YSRC, TDP chooses young guns over political dynasts in Andhra Pradesh". The New Indian Express (in ஆங்கிலம்). Retrieved 2024-05-16.
  9. "Winners in Andhra Pradesh - Sakshi". 2021-11-06. Archived from the original on 2021-11-06. Retrieved 2024-05-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குண்ட_இலட்சுமி_தேவி&oldid=4452988" இலிருந்து மீள்விக்கப்பட்டது