குண்டேச்சா சகோதரர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குண்டேச்சா சகோதரர்கள்
குண்டேச்சா சகோதரர்கள் (2012). இடமிருந்து வலமாக: இளைய சகோதரர் அகிலேஷ் குண்டேச்சா (பக்கவாத்தியம்), இளைய சகோதரர் இராமகாந்த் குண்டேச்சா (குரல்), மூத்த சகோதரர் உமாகாந்த் குண்டேச்சா (குரல்)
பின்னணித் தகவல்கள்
பிறப்பிடம்உஜ்ஜைன், இந்தியா
இசை வடிவங்கள்இந்துஸ்தானி இசை, தாகர் வாணி
தொழில்(கள்)பாரம்பரிய இசை பாடுதல்
இசைத்துறையில்1985 – தற்போது வரை
வெளியீட்டு நிறுவனங்கள்எச்எம்வி, மியூசிக் டுடே
இணையதளம்Official site

குண்டேச்சா சகோதரர்கள் (Gundecha Brothers) என்பவர்கள் தாகர் வானியின் துருபத் வகையைச் சேர்ந்த இந்திய பாரம்பரிய இசைப் பாடகர்களாவர். 1985 முதல் 2019 வரை உமகாந்த் குண்டேச்சா மற்றும் இராமகாந்த் குண்டேச்சா இருவரும் பாடி வந்தனர். மேலும் 2012 ஆம் ஆண்டிற்கான கலைக்காக இவர்களுக்கு பத்மசிறீ விருது வழங்கப்பட்டது. 2019 ல் இராமகாந்த் குண்டேச்சா இறந்ததைத் தொடர்ந்து, அவரது மகன் அனந்த் உமாகாந்த் குண்டேச்சாவுடன் நிகழ்ச்சி நடத்தத் தொடங்கினார். [1]

ஆரம்பகால வாழ்க்கையும் பின்னணியும்[தொகு]

இவர்கள் உள்ளூர் மாதவ் இசைக் கல்லூரியில் படித்தனர். உமாகாந்த் இசை மற்றும் பொருளாதாரத்தில் முதுகலை பட்டமும், இளையவரான இராமகாந்த் இசை மற்றும் வர்த்தகத்தில் பட்டம் பெற்றுள்ளனர். சியா பரிதுதீன் தாகர் மற்றும் அவரது சகோதரர் சியா மொகியுதீன் தாகர் ஆகியோரின் கீழ் துருபத் இசையில் பயிற்சி பெறுவதற்காக 1981 ஆம் ஆண்டில் இவர்கள் போபாலுக்குச் சென்றனர்.

இராமகாந்த் குண்டேச்சா போபாலில் 2019 நவம்பர் 8 அன்று தனது 57 வயதில் மாரடைப்பால் இறந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் இருந்தார். [2] போபாலில் 2019 நவம்பர் 9 அன்று தகனம் செய்யப்பட்டது.

தொழில்[தொகு]

இராமகாந்த் குண்டேச்சா (2012)

நான்கு வருட பயிற்சிக்குப் பிறகு, 1985 ஆம் ஆண்டு மே மாதம் போபாலில் நடைபெற்ற உத்தராதிகர் நடன மற்றும் இசை விழாவில் முதன்முறையாக பொதுவில் நிகழ்ச்சி நடத்தினர். துளசிதாசர், பத்மாகர் மற்றும் சூர்யகாந்த் திரிபாதி போன்ற இந்தி கவிஞர்களின் நூல்களை இணைத்து துருபத் திறனாய்வை விரிவுபடுத்த இவர்கள் பணியாற்றியுள்ளனர்.

இவர்கள் இந்தியாவின் மூத்த கதக் நிபுணர் மகாமகோபாத்யாய் முனைவர் பண்டிட் புரு தாதீச்சின் துருபத் பாடல்களையும் பாடுகிறார்கள். [3]

இவர்கள் போபாலுக்கு வெளியே ஒரு துருபத் நிறுவனத்தை அமைத்துள்ளனர். அங்கு இவர்கள் உலகம் முழுவதிலுமிருந்தும் வரும் மாணவர்களுக்கு கற்பிக்கிறார்கள். கலைகளை கற்பிப்பதற்காக இந்தியாவில் நடைமுறையில் உள்ள குரு- சீட கற்பித்தல் பாணியின்படி, இவர்கள் துருபத் பாரம்பரியத்தில் ஒரு இசைப் பள்ளியை நடத்துகிறார்கள். [4]

பதிவுகளும் கூட்டாளரும்[தொகு]

உமாகாந்த் குண்டேச்சா (2012). பின்னணியில் இராமகாந்த் குண்டேச்சா.

எச்.எம்.வி, மியூசிக் டுடே, ரிதம் ஹவுஸ், ஐ.பி.பி.என்.டபிள்யூ கச்சேரிகள் பெர்லின், நவராஸ் மற்றும் ஆடியோ ரெக் லண்டன் ஆகியவற்றின் மூலம் பல கேசட்டுகள் மற்றும் குறுந்தகடுகளை இவர்கள் பதிவு செய்துள்ளனர். இவர்கள் இந்தியாவில் பல தொலைக்காட்சி நிறுவனத்திற்காகவும் பாடியுள்ளனர். மேலும், பிரிட்டிஷ், யு.எஸ், ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு வானொலிகளிலும் பாடியுள்ளனர். இந்தியாவின் மதிப்புமிக்க இசை விழாக்கள் அனைத்திலும் ஒரு அங்கமாக இருந்துள்ளனர். ஐரோப்பா, யு.எஸ்.ஏ, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், பங்களாதேஷ், யு.ஏ.இ மற்றும் ஹாங்காங்கில் உள்ள பல முக்கியமான சர்வதேச இசை விழாக்கள் மற்றும் நிறுவனங்களிலும் சகோதரர்கள் நிகழ்த்தியுள்ளனர்.

இவர்கள் 1981 முதல் 1985 வரை மத்தியபிரதேச அரசின் உதவித்தொகை, 1987 முதல் 89 வரை தேசிய உதவித்தொகை, 1993 ல் உஸ்தாத் அலாவுதீன் கான் உதவித்தொகை, 1994 ல் சமசுகிருதி விருது மற்றும் 1998ல் குமார காந்தர்வா விருது, 2001 ஆம் ஆண்டில் மேவார் அறக்கட்டளையின் மத்தியப் பிரதேசம் மற்றும் தாகர் கரானா விருது ஆகியவற்றையும் பெற்றுள்ளனர்.

சர்ச்சை[தொகு]

செப்டம்பர் 4, 2020 அன்று, துருபத் சன்ஸ்தானின் மாணவர் மீது (குண்டேச்சா சகோதரர்களால் நடத்தப்படும் பயிற்சி பள்ளி) மறைந்த இராமகாந்த் குண்டேச்சா மற்றும் அகிலேஷ் குண்டேச்சா ஆகியோர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதை பின்னர் மற்ற மாணவர்கள் முகநூலிலும் ஊடகத்திலும் கலந்துரையாடல் மூலம் உறுதி செய்தனர். [5] [6] [7] [8] குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படும் போது அகிலேஷ் குண்டேச்சாவை வெளியேற்றுவதாக பள்ளி அறிவித்தது.

குறிப்புகள்[தொகு]

  1. Shuchita Jha (10 November 2019). "Nephew Anant to sing with Pt Umakant Gundecha". The Times of India. https://timesofindia.indiatimes.com/city/bhopal/nephew-anant-to-sing-with-pt-umakant-gundecha/articleshow/71988528.cms. 
  2. "Dhrupad maestro Ramakant Gundecha cremated". Yahoo! News. 9 November 2019. https://in.news.yahoo.com/dhrupad-maestro-ramakant-gundecha-cremated-083643202.html. 
  3. Shankar, Vijay (7 November 2018). "Sunil performs 'the Naayak' in Kathak" இம் மூலத்தில் இருந்து 11 July 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190711061813/http://www.afternoondc.in/culture/sunil-performs-the-naayak-in-kathak/article_235028. 
  4. Biplav, Ankur (2019-05-13). "Gundecha brothers hold a masterclass in Dhrupad" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/cities/mumbai/gundecha-brothers-hold-a-masterclass-in-dhrupad/article27110708.ece. 
  5. "Gundecha brothers caught in sexual abuse row, Dhrupad Sansthan probes" (in en). 2020-09-05. https://indianexpress.com/article/india/gundecha-brothers-sexual-harrasment-dhrupad-sansthan-6583687/. 
  6. "Two of 3 Gundecha brothers in sexual abuse row in Bhopal" (in en). 6 September 2020. https://timesofindia.indiatimes.com/city/bhopal/two-of-3-gundecha-brothers-in-sexual-abuse-row-in-bhopal/articleshow/77956834.cms. 
  7. "Bhopal based Dhrupad Sansthan blamed for sexual misconduct" (in en-US). 2020-09-07 இம் மூலத்தில் இருந்து 2021-12-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211218061851/https://www.classicalclaps.com/bhopal-based-dhrupad-sansthan-blamed-for-sexual-misconduct/. 
  8. Dhillon, Amrit (2020-10-01). "India's classical music and dance 'guru' system hit by abuse allegations" (in en). http://www.theguardian.com/global-development/2020/oct/01/indias-classical-music-and-dance-guru-system-hit-by-abuse-allegations. 

வெளி இணைப்புகள்[தொகு]