குண்டூர் மிளகாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குண்டூர் மிளகாய்
Guntur chilli
ஆந்திராவில் சூரிய ஒளியில் குண்டூர் மிளகாய் காய வைக்கப்பட்டுள்ளது
ஆந்திராவில் சூரிய ஒளியில் குண்டூர் மிளகாய் காய வைக்கப்பட்டுள்ளது
இனம்
கேப்சிகம் சைனென்சி

குண்டூர் மிளகாய் (Guntur chilli)(தெலுங்கு : Guntūr mirapakāyalu) என்பது இந்தியாவின் ஆந்திராவின் குண்டூர் மற்றும் பிரகாசம் மாவட்டங்களில் சாகுபடி செய்யப்படும் மிளகாய் வகைகளாகும். இவை உலகளவில் புகழ்பெற்றவை. ஆசியா, கனடா மற்றும் ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இலங்கை, வங்காளதேசம், மத்திய கிழக்கு, தென் கொரியா, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா போன்ற பகுதிகளுக்கு இந்தியாவிலிருந்து பெரும்பாலான வகை மிளகாய் மற்றும் மிளகாய்த் தூள் ஏற்றுமதி செய்யும் மாவட்டமாக குண்டூர் மாவட்டம் உள்ளது. குண்டூர் மிளகாயில் கேப்சைசின் அளவு இருப்பதால் பல்வேறு வண்ணங்கள் மற்றும் சுவைகளில் உள்ளன. குண்டூர் மிளகாய் இந்தியாவில் ஆந்திர மாநிலத்தின் கறி மற்றும் பல்வேறு பிரபலமான உணவுகளில் ஒரு முக்கிய பொருளாக உள்ளது. குண்டூர் மிளகாயின் முக்கிய வர்த்தக சந்தை குண்டூர் மிர்ச்சி யார்ட் என்று அழைக்கப்படுகிறது. இது ஆசியாவின் மிகப்பெரிய காய்ந்த சிவப்பு மிளகாய் சந்தையாகும்.[1] மிளகாய்களுக்கான சந்தை விலைகள் தேசிய வேளாண் சந்தையில்[2] அல்லது மின்-நாமில் நிர்ணயிக்கப்பட்டு அணுகப்படுகின்றன.

குண்டூர் மிளகாய் வகைகள்[தொகு]

குண்டூர் மிளகாய் ஆந்திர உணவு வகைகளில் ஒரு முக்கிய பொருள்
  • 334 மிளகாய் ஒரு முதன்மையான ஏற்றுமதி-தர மிளகாய்.[3]
  • தேஜா மிளகாய்[4] குண்டூர் மிளகாயின் சிறந்த வகை.[5]
  • குண்டூர் சன்னம் – எஸ் 4 வகை மிளகாய் மத்தியில் மிகவும் பிரபலமான வகை. இதனுடைய தேவை உலகம் முழுவதும் பெருமளவில் உள்ளது. இது ஆந்திராவின் குண்டூர், பிரகாரம், வாரங்கல் மற்றும் கம்மம் மாவட்டங்களில் பரவலாக விளைகிறது. நொறுக்கப்பட்ட மிளகாயின் தோல் தடிமனாகவும், சிவப்பு நிறமாகவும், காரமாகவும் இருக்கும். டிசம்பர் முதல் மே வரை இதன் அறுவடைக் காலமாகும். இந்த மிளகாய் வகையின் ஆண்டு உற்பத்தி சுமார் 280,000 டன் ஆகும். இதன் அமெரிக்க நறுமணப்பொருள் வணிக சங்க வண்ண மதிப்பு 50 முதல் 80 ஆகவும், உறைப்புத் தன்மையானது 35 முதல் 45 ஆகவும் உள்ளது.
  • 273 மிளகாய் பொதுவான சுருங்கிய மிளகாய்.

மற்ற குண்டூர் மிளகாய் வகைகள், பட்கி, இந்தோ-5, அங்கூர், ரோஷ்னி, பெட்கி மற்றும் மதுபாலா.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குண்டூர்_மிளகாய்&oldid=3136563" இருந்து மீள்விக்கப்பட்டது