குண்டு சுதர்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குண்டு சுதர்சன்
பிறப்புசூரம்புடி சுதர்சன் ராவ்
பீமவரம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
தேசியம் இந்தியா
கல்விகுடிசார் பொறியியலில் முனைவர்
படித்த கல்வி நிறுவனங்கள்அலகாபாத் தொழில்நுட்பக் கல்லூரி
ஜவகர்லால் நேரு தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகம், ஐதராபாத்து]]
பணிநடிகர், பேச்சாளர், விரிவுரையாளர்
செயற்பாட்டுக்
காலம்
1993 - தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
சூரம்புடி விசயலட்சுமி

குண்டு சுதர்சன் (Gundu Sudarshan) (பிறப்பு சூரம்புடி சுதர்சன் ராவ்) ) ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இந்திய நகைச்சுவை நடிகரும், எழுத்தாளரும், இலக்கிய ஆர்வலரும் ஆவார். [1] [2] இவர் 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 10 வயதிலிருந்தே இவருக்கு மேடை அனுபவம் உள்ளது. 1993இல் இயக்குநர் பாபு இயக்கிய மிஸ்டர் பெல்லம் படத்தின் மூலம் திரைப்படத்துறையில் நுழைந்தார் [1] இவர் ஐதராபாத்திலுள்ள ஜவகர்லால் தொழில்நுட்பப் பல்கலைகக் கல்லூரியில் குடிசார் பொறியியல் துறையில் முதுகலை பட்டமும், முனைவர் பட்டமும் பெற்றார். மேலும உளவியல் துறையிலும் பட்டம் பெற்ற இவர் முழு நேர நடிகராக மாறுவதற்கு முன்னர் பீமவரம் எஸ்ஆர்கேஆர் பொறியியல் கல்லூரியில் ஒரு விரிவுரையாளராகவும் சிலகாலம் பணியாற்றியுள்ளார்.[3].

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

சுப்பாராவ் - கனகலதா ஆகியோருக்கு பிறந்த இவர் தென்னிந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்திலுள்ள பீமவரத்தில் வளர்ந்தார். இவரது தந்தை ஒரு வழக்கறிஞராவார். இவர் சிறுவயதிலிருந்தே புராண நாடகங்களைப் பார்க்க ஆரம்பித்தார். ஏழாம் வகுப்பு வரை தாத்தாவின் கிராமமான மஞ்சிலியில் படித்தார். 10 வயதிலிருந்தே இவருக்கு மேடை அனுபவம் இருந்தது. இவர் தனது 7 ஆம் வகுப்பில் மொண்டி குருவு பண்டா சிஷ்யுடு என்ற மேடை நாடகத்தில் சீடன் வேடத்தில் நடித்தார். மேலும், தனது பள்ளியில் கலாச்சார நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார். பீமவரத்தில் பள்ளிப்படிப்பை முடித்தார்.

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 MAA, Stars. "Sudarshan". maastars. Movie Artists Association. Retrieved 6 July 2016.
  2. https://www.imdb.com/name/nm4646325/
  3. Phani. "Interview with Surampudi Sudarshan". totaltollywood.com. totaltollywood. Archived from the original on 4 May 2007. Retrieved 3 May 2007.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குண்டு_சுதர்சன்&oldid=3311372" இலிருந்து மீள்விக்கப்பட்டது