குண்டுலுபேட்
குண்டுலுபேட்
குண்டுலுபேட்டை | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 11°48′N 76°41′E / 11.8°N 76.68°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கர்நாடகா |
மாவட்டம் | சாமராஜநகர் |
அரசு | |
• வகை | குண்டுலுபேட் நகராட்சி மன்றம் |
• நிர்வாகம் | நகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 4.22 km2 (1.63 sq mi) |
ஏற்றம் | 816 m (2,677 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 28,105 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 571111 |
தொலைபேசி குறியீடு எண் | 08229 |
வாகனப் பதிவு | KA-10 |
இணையதளம் | www |
குண்டுலுபேட்'டை (Gundlupet), இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தின் தெற்கில், சாமராஜநகர் மாவட்டத்தில் அமைந்த ஒரு நகராட்சி. இந்நகரம் மேற்கு தொடர்ச்சி மலையில் 816 மீட்டர் (2,677 அடி).உயரத்தில் உள்ளது. இவ்வூரில் விஜய நாராயாணர்கோயில் உள்ளது[1]. குண்டுலுபேட் நகரத்திலிருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் பந்திப்பூர் தேசியப் பூங்கா உள்ளது.
அமைவிடம்
[தொகு]தேசிய நெடுஞ்சாலை எண் 766ல் அமைந்த குண்டுலுபேட் நகரம், மைசூருக்கு தெற்கே 59 கிலோ மீட்டர் தொலைவிலும்; பெங்களூருக்கு தென்மேற்கே 205 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்நகரம் தமிழக-கேரள மாநில எல்லைகளுக்கு அருகில் அமைந்துள்ளது. குண்டுலுபேட் நகரத்திலிருந்து துவங்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 181 உதகமண்டலம் மற்றும் கோயம்புத்தூர் வழியாக நாகப்பட்டினம் வரை செல்கிறது.[2]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, 6,525 வீடுகளும், 23 வார்டுகளும் கொண்ட குண்டுலுப்பேட்டை நகராட்சியின் மொத்த மக்கள் தொகை 28,105 ஆகும். அதில் இந்துக்கள் 79.43%, இசுலாமியர்கள் 19.16%, கிறித்தவர்கள் 0.84% மற்றும் பிற சமயத்தவர்கள் 0.56% ஆக உள்ளனர்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "History | Chamarajanagar District, Government of Karnataka | India" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-05-10.
- ↑ "Gundlupet: A Quick Guide to The Flower Farms of Karnataka". India News, Breaking News | India.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-21.
- ↑ Gundlupet Town Population Census 2011