குண்டுத் திருகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இரண்டு குண்டு திருகுகளின் படங்கள். உள்ளீடப்பட்ட இரண்டு படங்கள் மேலுள்ள குண்டு திருகின் நெருங்கிய அமைப்பினை காட்டுகிறது. Left inset: recirculating tube removed showing retainer bracket, loose balls and tube. Right inset: closer view of the nut cavity.

குண்டுத் திருகு (ஆங்கிலத்தில்: BALL SCREW) ஒரு நேரோட்ட இயக்க இயந்திரமாகும், இது சுழற்சி நகர்வை சிறிதளவு உராய்வுடன் நேரோட்ட நகர்வாக மாற்றுகின்றது. இது துல்லியமாகச் செயல்பட ஒரு திரிக்கப்பட்ட தண்டு அமைப்பானது 'பந்து தாங்கு'(Ball bearing) நகரும் வண்ணம் வட்டவடிவப் பாதையை அளிக்கிறது.

பயன்பாடுகள்[தொகு]

குண்டுத் திருகு அமைப்பானது, வானூர்தி, ஏவுகணை, வாகனங்களில் நகர்வு கட்டுப்பாட்டு அமைப்புகளிலும், மேலும் இயந்திர கருவிக்கள், ரோபோக்கள் மற்றும் துல்லியமான நகர்வுகள் தேவைப்படும் உபகரணங்களான குறைக்கடத்தி உற்பத்தி இயந்திரங்களில் ஸ்டெப்பர் மோட்டார்களில் 'அதிதுல்லிய குண்டுத் திருகுகள்' பயன்படுத்தப்படுகின்றன.

நன்மைகள்[தொகு]

குண்டுத் திருகுகள் 90% துல்லியமானது. திருகுக்கும், நட்டுக்கும் இடையே சிறிதளவே உராய்வுகள் ஏற்படுவதால் குறைந்தளவே பராமரிப்பு மற்றும் உயவு எண்ணெய் தேவைப்படுகிறது, இதனால் இதன் வாழ்நாள் கூடுகின்றது. [1]

சமன்பாடு[தொகு]

T ஆனது முறுக்கு விசை F ஆனது நேரியல் விசை l ஆனது குண்டுத் திருகின் தண்டு v ஆனது குண்டுத் திருகின் திறன்

சான்றுகள்[தொகு]

  1. "குண்டுத்திருகு". மூல முகவரியிலிருந்து 2015-09-26 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் செப்டம்பர் 20, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குண்டுத்_திருகு&oldid=3240650" இருந்து மீள்விக்கப்பட்டது