குண்டாறு (தேனி)
Appearance
குண்டாறு (குண்டு+ஆறு) தமிழ் நாட்டில் உள்ள பருவ கால ஆறுகளுள் ஒன்று. தேனி மாவட்டதில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைத் தெடரில் அமைந்துள்ள, ஆண்டிபட்டி மலையின் மலைச் சிகரங்கலில் ஓடிவரும் ஓடைகளில் இருந்து ஆண்டிபட்டி அருகில் கடல் மட்டத்தில் இருந்து 260 மீ. உயரத்தில் குண்டாறு உருவாகின்றது. இவ் ஆறானது உருவாகும் பகுதி மேல் குண்டாறு எனவும், வங்கக் கடலில் கலக்கும் பகுதி கீழ் குண்டாறு எனவும் அழைக்கப்படுகின்றது.
குண்டாறானது மதுரை, விருதுநகர், இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் வழியாகச் சென்று தெற்கு மூக்கையூர் அருகில் வங்காள விரிகுடாவில் கலக்கின்றது. இதன் நீளம் 146 கி.மீ ஆகும். இதன் முக்கிய துணை ஆறுகளாக தெற்காறு காணல் ஓடை கிருதுமால் நதி மற்றும் பரலை ஆறுகள் ஆகும். குண்டாறானது ஒரு பருவ கால ஆறாகும்.
துணை ஆறுகள்
[தொகு]- தெற்காறு
- காணல் ஓடை
- கிருதுமால் நதி
- பரலை ஆறு
ஆதாரம்
[தொகு]- 1.3 Drainage பரணிடப்பட்டது 2018-08-20 at the வந்தவழி இயந்திரம்
- natural resources
- Environment Profile for Ramanathapuram District பரணிடப்பட்டது 2009-04-09 at the வந்தவழி இயந்திரம்
- Institutional Options for Improving Water Management in India – The Potential Role of River Basin Organizations , Final draft[தொடர்பிழந்த இணைப்பு] பக்கம் 44.
- National Water Development Agency (NWDA),India: Chapter 2 Physical Features.