குண்டாறு அணை
Appearance
குண்டாறு நீர்த்தேக்கம் (Gundar Dam) என்பது தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் மற்றும் தென்காசிக்கு அருகில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள நீர்த்தேக்கம் ஆகும். இது தென்காசி மாவட்டத்தில் ஒரு முக்கியமான சுற்றுலாத் தலமாகவும் அமைந்துள்ளது. இந்த நீர்த்தேக்கமானது அப்போதைய திருநெல்வேலி மாவட்டத்தின் பாசனத் தேவைகளை நிறைவு செய்யும் பொருட்டு 1983 ஆம் ஆண்டில் கட்டப்பட்டுள்ளது. குண்டாறு ஒரு இயற்கை நீர்த்தேக்கமாக அமைந்துள்ளது. இந்த நீர்த்தேக்கத்தின் நீளம் 389 மீட்டராகவும், உயரம் 36.10 மீட்டராகவும் அமைந்துள்ளது. இந்த நீர்த்தேக்கமானது ஒரு நடுத்தரப் பாசனத் திட்டமாகும். இந்த நீர்த்தேக்கத்தின் கட்டுமானப் பணிகளானது 1979 ஆம் ஆண்டு தொடங்கி 1983 ஆம் ஆண்டு நிறைவு பெற்றது. இந்த நீர்த்தேக்கத்தின் கன அளவு 25 மில்லியன் கன அடி ஆகும்.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Dams in Tamil Nadu". www.discoveredindia.com. பார்க்கப்பட்ட நாள் 2022-09-03.
- ↑ "PWD Chittar" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-03.