குண்டாங்குழி மகாதேவர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குண்டாங்குழி மகாதேவர் ஆலயம்

புதுவை அருகிலுள்ள மதகடிப்பட்டில் அமைந்துள்ளது குண்டாங்குழி மகாதேவர் கோயில். அழகான கற்றளியாக விளங்கும் இக்கோயில் கி.பி. 985-இலிருந்து 1016 வரை ஆட்சி செய்த முதலாம் ராசராசனால் கட்டப்பட்டது என இங்குள்ள ஒரு கல்வெட்டுக் குறிப்பிடுகிறது.

பெயர்க்காரணம்[தொகு]

குண்டாங்குழி என்ற குளத்தின் கரையில் அமைந்துள்ள இக்கோயிலில் உறையும் இறைவன் குண்டாங்குழி மகாதேவர் என்றும் கல்வெட்டுகள் குறிக்கின்றன. இவ்வூர் திருபுவனைப் புவிச் சதுர்வேதி மங்கலத்தின் (தற்போது திருபுவனை) ஒரு பகுதியாக விளங்கியது.

கோயில் அமைப்பு[தொகு]

கருவறை சதுரமாகவும் மேலேயுள்ள கிரீவம் வட்டமாயும் சிகரம் உருண்டையாகவுமுள்ள கருவறை வெளிச் சுவற்றுக் கோட்டங்களை தட்சிணாமூர்த்தி பிரம்மா லிங்கோத்பவர் போன்ற சிற்பங்கள் அலங்கரிக்கின்றன.

விழாக்கள்[தொகு]

இங்கு விசேஷமாகத் தேவியின் சன்னதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. சப்தமாதர்களுக்குத் தனி சந்நிதியும் அமைந்துள்ளது. சோழர்காலத்தில் சப்த மாதர்களுக்கு சிறப்பு வழிபாடுகளும் விழாக்களும் எடுக்கப்பட்டிருக்கின்றது.

கல்வெட்டுகள்

கல்வெட்டுகள்[தொகு]

இக்கோயிலில் முதலாம் இராசராசன், இராசேந்திரன், முதலாம் இராசாதிராசன், முதலாம் குலோத்துங்கன் போன்ற சோழ அரசர்களால் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் உள்ளன.

படங்கள்[தொகு]