குணவீர சிங்கையாரியன்
Appearance
குணவீர சிங்கையாரியன் யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகளுள் ஒருவன். இவன் தந்தையான செயவீர சிங்கையாரியனைத் தொடர்ந்து குணவீரன் பட்டத்துக்கு வந்தான். இவன் பட்டத்துக்கு வந்த ஆண்டு 1414 அல்லது 1417 ஆகும். குணவீரனது மகனே கனகசூரிய சிங்கையாரியன் ஆவான்.