குட் பேட் அக்லி
குட் பேட் அக்லி | |
---|---|
![]() திரைப்படச் சுவரொட்டி | |
இயக்கம் | ஆதிக் ரவிச்சந்திரன் |
தயாரிப்பு | நவீன் யர்னீ இரவி சங்கர் குல்சன் குமார் பூஷன் குமார் கிருஷ்ணன் குமார் |
கதை | ஆதிக் ரவிச்சந்திரன் இரவி கந்தசாமி ஹரிஷ் மணிகண்டன் |
இசை | ஜி. வி. பிரகாஷ் குமார் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | அபிநந்தன் இராமானுஜம் |
படத்தொகுப்பு | விஜய் வேலுகுட்டி |
கலையகம் | மைத்ரி மூவி மேக்கர்ஸ் டீ-சீரீஸ் |
வெளியீடு | 10 ஏப்ரல் 2025 |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹225–270 கோடி[1][2][3] |
குட் பேட் அக்லி (Good Bad Ugly) ஓர் அதிரடித் தமிழ்த் திரைப்படமாகும். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார், திரிஷா கிருஷ்ணன், பிரபு, பிரசன்னா, அர்ஜூன் தாஸ், சுனில் வர்மா, யோகி பாபு, சைன் டாம் சாக்கோ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் 2023-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு, 10 ஏப்ரல் 2025 அன்று வெளியானது.[4]
நடிகர்கள்
[தொகு]- அஜித் குமார் - ஏகே[5]
- திரிஷா கிருஷ்ணன் - இரம்யா[6]
- பிரபு
- பிரசன்னா
- அர்ஜூன் தாஸ்
- சுனில் வர்மா
- இராகுல் தேவ்
- யோகி பாபு
- சைன் டாம் சாக்கோ
- இரகு இராம்[7]
இசை
[தொகு]ஜி. வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இவர் ஆதிக் உடன் பணியாற்றும் மூன்றாவது படம் ஆகும். இதற்கு முன்னர் ஆதிக் உடன் திரிஷா இல்லனா நயன்தாரா, மார்க் ஆண்டனி திரைப்படங்களில் பணியாற்றினார். அஜித் குமாருக்கு கிரீடம் படத்திற்கு பிறகு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் இரண்டாவது படமாகும். முதலில் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பதாக இருந்தது.[8][9]
"ஓஜி சம்பவம்" என்ற ஒற்றைப் பாடல் 18 மார்ச்சு 2025 அன்று வெளியானது.[10]
தயாரிப்பு
[தொகு]"நம்மில் அனைவருக்குள்ளும் நல்லது, கெட்டது, அசிங்கமானது என மூன்று வகை குணங்கள் உள்ளன. அவை மூன்றும் வெளிவர சமயம் பார்த்துக் காத்திருக்கும். எந்த நேரம், எப்படி வெளிவரும் என்பதுதான் முக்கியம். அதுதான் இந்தப் படம்," என்று இப்படத்தைப்பற்றி இயக்குநர் ஆதிக் கூறினார். "இந்த உலகம் ‘குட்’டாக இருக்கும்போது நாமும் ‘குட்’டாக இருக்கலாம். உலகம் ‘பேட்’ ஆக இருந்தால் நாம் ‘அக்லி’ ஆகத்தான் இருக்க வேண்டியிருக்கும். இதுதான் இப்படத்தின் கதைக்கரு. இதை வைத்துத்தான் கதை பயணமாகிறது" என்றும் தெரிவித்தார்[11]
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவத்தின் முதல் தமிழ்த் திரைப்படமாகும்.[12] இவர்கள் பொதுவாக நிறைய தெலுங்கு மொழி படங்களைத் தயாரிப்பவர்கள். இப்படத்தின் தலைப்பை பரிந்துரை செய்தது அஜித் தான் என்று ஆதிக் தெரிவித்தார்.[13]
இப்படத்தின் தயாரிப்பு செலவு ₹270 கோடி (ஐஅ$32 மில்லியன்) என்றும், அஜித்தின் ஊதியம் ₹165 கோடி (ஐஅ$19 மில்லியன்) என்றும் கூறப்படுகிறது.[1][14]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Prakash, B. V. S. (1 July 2024). "Tamil Star Ajith's Good Bad Ugly Goes Over Budget?". Deccan Chronicle (in ஆங்கிலம்). Archived from the original on 1 July 2024. Retrieved 1 July 2024.
- ↑ சிவா (13 October 2023). "அஜித் 63ன் பட்ஜெட் இதுதான்!. சம்பளம் மட்டும் இத்தனை கோடியா?!.. இதெல்லாம் எங்க போய் முடியுமோ!..." [This is Ajith 63's budget!. Is the salary alone so many crores?!.. Where will all this end up!...]. Cinereporters.com. Archived from the original on 29 December 2024. Retrieved 29 December 2024.
- ↑ "அஜித்துக்கு சம்பளம் இவ்வளவா?" [Is this how much Ajith gets paid?]. தினமணி. 12 October 2023. Archived from the original on 29 December 2024. Retrieved 29 December 2024.
- ↑ "Good Bad Ugly Movie Review Live Updates: Early reviews say 'Thala' Ajith Kumar is back with actioner's success, film earns Rs 18 cr gross in advance on day 1". The Indian Express (in ஆங்கிலம்). 2025-04-10. Retrieved 2025-04-10.
- ↑ S, Goutham (22 February 2025). "Good Bad Ugly: Trisha Krishnan officially joins cast of Ajith Kumar starrer, reuniting with superstar after Vidaamuyarchi". Pinkvilla (in ஆங்கிலம்). Archived from the original on 22 February 2025. Retrieved 22 February 2025.
- ↑ Sudevan, Praveen (18 March 2025). "Raghu Ram on 'Good, Bad, Ugly', working with Ajith Kumar and Adhik Ravichandran" (in en). தி இந்து இம் மூலத்தில் இருந்து 18 March 2025 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20250318152707/https://www.thehindu.com/entertainment/movies/raghu-ram-good-bad-ugly-ajith-kumar-adhik-ravichandran/article69343000.ece.
- ↑ "GV Prakash Kumar to reunite with Ajith after 17 years in 'Good Bad Ugly'". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 25 November 2024 இம் மூலத்தில் இருந்து 25 November 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://ghostarchive.org/archive/20241125141152/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/gv-prakash-kumar-to-reunite-with-ajith-after-17-years-in-good-bad-ugly/articleshow/115650188.cms.
- ↑ Subramanian, Anupama (30 November 2024). "GVP replaces DSP in Ajith's Good Bad Ugly". டெக்கான் க்ரானிக்கிள் (in ஆங்கிலம்). Archived from the original on 30 November 2024. Retrieved 30 November 2024.
- ↑ Kumar, Akshay (18 March 2025). "'OG Sambavam' from Ajith Kumar's Good Bad Ugly: The first single advises nemesis not to mess with AK". சினிமா எக்ஸ்பிரஸ் (in ஆங்கிலம்). Archived from the original on 18 March 2025. Retrieved 18 March 2025.
- ↑ "மனிதனின் மூன்று குணங்களை விவரிக்கும் 'குட் பேட் அக்லி', திரைச்செய்தி செய்திகள் - தமிழ் முரசு Cinema News in Tamil, Tamil Murasu". Tamil Murasu. 2025-03-21. Retrieved 2025-03-22.
- ↑ Prakash, B. V. S. (17 March 2024). "Mythri Movie Makers storm Kollywood, Mollywood". டெக்கான் க்ரானிக்கிள் (in ஆங்கிலம்). Archived from the original on 14 June 2024. Retrieved 16 March 2025.
- ↑ "குட் பேட் அக்லி டைட்டிலை சொன்னதே அஜித் குமார் தான் - இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்" [The title Good Bad Ugly was suggested by Ajith Kumar, says director Adhik Ravichandran]. மாலை மலர். 20 March 2025. Archived from the original on 20 March 2025. Retrieved 20 March 2025.
- ↑ "Ajith Likely To Be Paid Rs 165 Crore For His Movie With Adhik Ravichandran: Reports". நியூசு18 (in ஆங்கிலம்). 13 October 2023. Archived from the original on 19 October 2023. Retrieved 15 March 2024.