உள்ளடக்கத்துக்குச் செல்

குட்டைவால் முள்ளங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Chonggakmu
சோங்காக் முள்ளங்கி
இனம்Raphanus raphanistrum
துணையினம்R. raphanistrum subsp. sativus
பயிரிடும்வகைப் பிரிவுவெள்ளை முள்ளங்கி
தோற்றம்கொரியா
கொரியப் பெயர்
Hangul총각무
Hanja總角-
திருத்தப்பட்ட ரோமானியமாக்கல்chonggangmu
McCune–Reischauerch'onggangmu

குட்டைவால் முள்ளங்கி (Chonggak radish அல்லது ponytail radish) என்பது கொரிய நாட்டு வெள்ளை முள்ளங்கி வகையைச் சார்ந்த முள்ளங்கி வகையாகும். [1][2] இக்குட்டை முள்ளங்கியின் தாவரம் முழுமையும், கொரிய நாட்டினரால் முழுமையாக சமையலுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இவற்றின் வேர் பகுதியானது தெளிவாகத் தெரிகிறது. இம்முள்ளங்கியின் இலை, இலைத்தண்டு என முழுமையாக, அவர்களின் பாரம்பரியச் சமையலில் பயன்படுத்தப்படுகிறது. மேலும், திருமணமாகத கொரிய ஆடவர் தனது சிகையலங்கராத்தினை அவர்களின் பராம்பரிய வழக்கப்படி ஒரு முடிச்சு போடுவர். அம்முடிச்சின் தோற்றமும், இம்முள்ளங்கியின் தோற்றமும் ஏறத்தாழ ஒத்து வருவதால், இக்கொரிய பெயரினைப் பெறுவதாகக் கூறுவர்.[3]இதன் தாவரவியல் பெயர் Raphanus sativus ஆகும்.

உணவு

[தொகு]

ஒரு முள்ளங்கியின் எடை ஏறத்தாழ 60-80 கிராம் உடையதாக இருக்கும். பொதுவான கொரிய முள்ளங்கியை விட, பத்து பதினைந்து மடங்கு சிறியதாக அளவில் இருக்கும். முள்ளங்கியின் இலைகள் முட்டை வடிவத்துடன் காணப்படுகின்றன. வேர்பகுதியானது, எட்டு அல்லது ஒன்பது சென்டிமீட்டர் நீளமுடையாதாக விளங்குகிறது. முள்ளங்கிப்பகுதியானது(rhizomes) 2-3 சென்ட்டிமீட்டர் நீளமுடையதாக உள்ளன. கொரிய மக்களின் பாரம்பரியப் பொரியலாகவும், சூப்பாகவும் (கொதிச்சாறு) பயனாகும், காய்கறிகளில் இது முக்கியமானது எனலாம். இதன் இயற்கையான சுவை நீர்பற்றுடன் இருந்தாலும், கடித்து சுவைக்கும் போது, மொறு மொறுப்பாகவும் இருக்கும் இயல்பினைப் பெற்றுள்ளன. பெரும்பாலும் இவைஅரைவேக்காடாக, கொரியர்களால் உட்கொள்ளப்படுகின்றன. கொரிய முள்ளங்கி என்பதும் இந்த வகை முள்ளங்கியும் வெவ்வேறு இயல்புடையன ஆகும். கொரிய முள்ளங்கி என்பது இதனை விட அளவில் பெரியதாக இருக்கும். ஒப்பீ்ட்டு அளவில் இதன் சுவை அதீதமானதாகக் கூறப்படுகிறது.

முள்ளங்கிக் கிமிட்சி தயாரிக்கும் முறை

[தொகு]

கிமிட்சி என்பது கொரியர்களின் உணவு பக்குவமுறை ஆகும். இது தமிழர்களின் ஊறுகாய் போன்ற பக்குவபடுத்தப்பட்ட உணவு முறை போன்றதாகும். பல்வேறு நாடுகளிலும், இது விரும்பி உண்ணப்படுகிறது. பெரும்பாலும் இந்த பக்குவ உணவு முறை என்பது காய்கறிகளான முட்டைகோசு, முள்ளங்கிக் கொண்டே உருவாக்கப்படுகின்றன. தாரளமாக கிடைக்கும் காலங்களில் இவை கொரிய பாரம்பரிய முறைப்படி நொதிக்கப்பட்டு பக்குவப்படுத்தப்படுகின்றன. இப்பக்குவப் படுத்துதலுக்கு சிவந்த மிளகாய் தூள், மிளகு, வெங்காயம் போன்ற நறுமணப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. உப்புச்சுவையும், நறுமணப்பொருட்களின் தன்மையும் மேலோங்கி இருக்கும். 'சிமிசேயி'(‘shimchae') என்ற கொரிய சொல்லுக்கு காய்கறிகளுக்கு உப்பிடல் என்பது பொருளாகும். ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இதன் தொடக்கமாகக் கருதப்படுகிறது. தொடக்கக் காலத்தில் இதனுடன் உப்பே அதிகமாக கலக்கப்பட்டாலும், நூற்றாண்டுகள் செல்ல செல்ல, இதனுடன் பல்வேறு நறுமணப்பொருட்கள் இணைத்துக் கொள்ளப்பட்டன. விண்வெளிக்கு எடுத்துச்செல்லப்பட்ட இந்த உணவில், எந்த வித பாக்டீரியாக்களோ அல்லது விண்வெளி கதிர்களின் தாக்கமோ ஏற்படவில்லை என நீரூபிக்கப்பட்டுள்ளது.[4]

முள்ளங்கிக் கிமிட்சி (Chonggakmu Kimchi) தயாரிக்க இதன் முள்ளங்கிகள், நொதித்த பாரம்பரியக் குழம்பு, பச்சை வெங்காயங்கள், கடுகு இலைகள் போன்றவைகளைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. முதலில் சிவப்பான மிளகாய்ப்பொடி தயாரிக்கப்படுகிறது. பின் அதனுடன் ஒட்டும் தன்மையுடைய அரிசிப்பசை கலக்கப்படுகிறது. இவைகளுடன் பாரம்பரிய முறையில் தயாத்து வைத்துள்ள குழம்புடன் கலக்கிப் பக்குவப்படுத்தப்படுகிறது. சிறிது நேரத்திற்குப் பிறகு, இதனுடன் நறுக்கிய பச்சை வெங்காயம், பூண்டுத்துண்டுகள், மஞ்சள் நிற நொதித்த பாரம்பரியக் குழம்புடனும் கலக்கி உருவாக்கப்படுகிறது. இம்மஞ்சள் நிற பாரம்பரிய குழம்பு இல்லையெனில், ஏற்கனவே நொதித்து வைக்கப்பட்ட கூன் இறாலும் கலந்து உருவாக்கப்படுகிறது. இத்தகைய நொதித்தல்களை உடைய குழம்புக் கலவைகளோடு, நறுக்கிய முள்ளங்கி, வெங்காயம், இஞ்சியும் இணைக்கப்பட்டு உணவுக் கலவை உருவாக்கப்படுகிறது. அப்பொழுது முள்ளங்கியில் இருந்து வரும் நீர் வடிக்கப்படுகிறது. இறுதியாக இந்த கிமிட்சி உணவுக்கலவையானது, இனிப்பு மற்றும் உப்பு கலந்து பரிமாறப்படுகிறது. இம்முள்ளங்கித் துண்டுகள் முதன்மையாக சேர்க்கப்பட்டாலும், சுருள் சுருளாக இருக்கும் கடுகு இலைத்(File:Curly mustard leaves.jpg)தாவரத்தின் இலைகளும் கூட்டாக இணைத்து சமைக்கப்படுகின்றன. இதற்கு இதன் இலைகள் சுத்தமாக கழுவப்பட்டு, சிறு சிறு துண்டுகளாக நறுக்கப்பட்டு தனியே, அரைவேக்காடாக, வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ளப்படுகிறது. பிறகு மற்ற கலவைகளோடு இணைத்து கலக்கி, நொதித்தல் குழம்புகளோடு இணைக்கப்பட்டு, சுவையான கூட்டாகத் தரப்படுவதும் உண்டு.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Daley, Bill (21 September 2011). "A mother's lesson: Country living inspires the wife to learn mother's traditional kimchee". Chicago Tribune இம் மூலத்தில் இருந்து 2017-12-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171222051558/http://articles.chicagotribune.com/2011-09-21/features/ct-food-0921-kimchee-family-20110921_1_kimchee-radishes-cabbage. 
  2. Hyman, Vicki (12 October 2011). "Marja Vongerichten's 'Kimchi Chronicles' offers up Korean tastes for the American palate". NJ.com. http://www.nj.com/entertainment/dining/index.ssf/2011/10/kimchi_chronicles_offers_up_ko.html. 
  3. "머리모양새 이야기" [hairstyle story]. culturecontent.com (in கொரியன்). Korea Creative Content Agency. Archived from the original on 2017-12-22. பார்க்கப்பட்ட நாள் 2018-11-19.
  4. https://www.organicfacts.net/kimchi.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=குட்டைவால்_முள்ளங்கி&oldid=3550325" இலிருந்து மீள்விக்கப்பட்டது