குட்டைக்கிளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குட்டைக்கிளி
இந்தியாவின் கருநாடகத்தில், ஆண் கிளி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
லோரிகுலசு
இனம்:
லோ. வெர்னாலிசு
இருசொற் பெயரீடு
லோரிகுலசு வெர்னாலிசு
(இசுபார்மன், 1787)

குட்டைக்கிளி (Vernal Hanging Parrot)(லோரிகுலசு வெர்னாலிசு) என்பது இந்தியத் துணைக்கண்டம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் வேறு சில பகுதிகளில் வசிக்கும் ஒரு சிறிய கிளி ஆகும். இது உள்ளூர் இயக்கங்களுக்கு உட்படுகிறது. இதன் உணவில் பழங்கள், விதைகள், மொட்டுகள் உள்ளன. பூக்களினால் இவை ஈர்க்கப்படுகின்றன. பழங்களுக்காக ஆலமரத்துக்கும், பூக்களிலிருந்து தேன் எடுக்க வாழை மரத்துக்கும் இவை அடிக்கடி வரும்.

கொங்கனில், மகாராட்டிரா, இந்தியா

குட்டைக்கிளி அளவில் சிறியது. பச்சை நிறத்தில் நிறத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் கிளி ஆகும். இதன் நீளம் 14 செ. மீ. மட்டுமே. இது சிறிய வால் ஒன்றைக் கொண்டுள்ளது. முதிர்ச்சியடைந்த கிளியின் ஆணுக்குத் தொடை மற்றும் அலகு சிவப்பு நிறத்துடன் நீல நிறத் தொண்டை இணைப்புடன் காணப்படும். பெண் கிளியில் பச்சை நிற இணைப்பு உள்ளது. குட்டைக்கிளி வறண்ட காடு மற்றும் சாகுபடி நிலங்களில் காணப்படும் பறவை. இது மரங்களில் உள்ள துளைகளில் கூடு கட்டி, 2 முதல் 4 வெள்ளை முட்டைகளை இடும். முதிர்ச்சியடையாத பறவைகள் மந்தமான தொடையினைக் கொண்டுள்ளன. மேலும் தொண்டைத் திட்டு இல்லை. குட்டைக்கிளி இதன் உறவினர்களைக் காட்டிலும் குறைவான கூட்டத்துடன் காணப்படும் பொதுவாக இனப்பெருக்க காலத்திற்கு வெளியே சிறிய குழுக்களாக இருக்கும். இது விரைவாக பறக்கக்கூடியது.

இலங்கையில், இது இதனையொத்த இலங்கை தொங்கும் கிளி, (லோ. பெரிலினசு) எனக் கருதப்படுகிறது.

இனப்பெருக்கம்[தொகு]

மரத் துவாரங்களில் குட்டைக்கிளி கூடு கட்டும். கூடுகளில் இலைகளின் துண்டுகள் வரிசையாக அடுக்கிவைக்கப்பட்டிருக்கும். பொதுவாக ஒரு கூட்டில் மூன்று முட்டைகள் வரை இருக்கும். முட்டைகள் வெள்ளை நிறத்தில் காணப்படும். பெண் பறவை 20 நாட்களுக்கு முட்டைகளை அடைகாக்கும். குஞ்சுகள் பொரித்து 33 நாட்களுக்குள் வளர்ந்து கூட்டை விட்டு வெளியேறும்.[2]

லோரிகுலசு வெர்னாலிசு
ஆண் குட்டைக்கிளி கொய்யா மரத்தில்

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Loriculus vernalis". IUCN Red List of Threatened Species 2016: e.T22685366A93070280. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22685366A93070280.en. https://www.iucnredlist.org/species/22685366/93070280. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. David Alderton (2003). The Ultimate Encyclopedia of Caged and Aviary Birds. London, England: Hermes House. பக். 215. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-84309-164-X. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குட்டைக்கிளி&oldid=3779203" இலிருந்து மீள்விக்கப்பட்டது