குட்டி ரேவதி (தமிழ் எழுத்தாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மருத்துவர். எஸ். ரேவதி (புனைப் பெயர்: குட்டி ரேவதி) ஒரு இந்தியப் பாடலாசிரியர், கவிஞர், சீர்திருத்தவாதி மற்றும் ஒரு மருத்துவர் ஆவார்.  இவர் மூன்று கவிதை நுால்களை வெளியிட்டுள்ளார். மேலும், பனிக்குடம் என்ற பெண் எழுத்தாளர்களின் எழுத்துக்காக வெளிவரும் காலாண்டு இலக்கிய பத்திரிக்கையின் தொகுப்பாசிரியர் ஆவார். இதுவே தமிழகத்தின் முதல் பெண்ணீய செய்தி இதழாகும். இவர் தனது சக மாணவர்களின் கவிதைத் தொகுப்புகள் தொடர்பான திறனாய்வு இலக்கியக் கூட்டங்களை நடத்தியுள்ளார். இவர் தனது சுய படைப்புகள் குறித்தும் பணிகளைத் தொடங்கினார். பள்ளிப்படிப்பிற்குப் பிறகு உலகின் மிகப் பழமையான மருத்துவ முறையாகவும், தமிழ்நாட்டைத் தாயகமாகவும் கொண்ட சித்த மருத்துவத்தைப் பயின்று இளங்கலைப்  பட்டமும் பெற்றார். அவர் சென்னையில் உள்ள மெட்ராசு வளர்ச்சிசார் கல்வி நிறுவனத்தில் (Madras Institute of Development Studies) மருத்துவம் சார்ந்த மானிடவியலில் தனது முனைவர் பட்டத்திற்கான ஆய்வுப் படிப்பை மேற்கொண்டார். இந்தியா டுடே என்ற பத்திரிக்கையால் வழங்கப்பட்ட எதிர்கால இலக்கியத்தின் முகங்கள் (சிகரம் 15) என்ற விருதினைப் பெற்றார். சாகித்ய அகாதெமி அமைப்பினரால்  2005 ஆம் ஆண்டில் இந்தியாவில் உள்ள இலக்கியவாதிகளை சந்திப்பதற்கான உதவித்தொகையைப் பெற்றார். இவர் சமகாலத்திய  தமிழ் கவிஞராக இருந்து கருத்து முரண்பாடுகளைக் கொண்ட, வாதத்துக்கிடமான பல கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.[1][2][3]

References[தொகு]

  1. "Kutti Revathi". Rotterdam: Poetry International. பார்த்த நாள் 20 June 2013.
  2. Elizabeth Dougan (April 2013). "Kutti Revathi: In the Eye of a Poetic Storm". Australia: Madurai Messenger. பார்த்த நாள் 20 June 2013.
  3. Nirmala Ravindran (24 September 2007). "Body of words". Australia: India Today. பார்த்த நாள் 20 June 2013.