குட்டி பத்மினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குட்டி பத்மினி
Kutty padmini.jpg
குட்டி பத்மினி ஒரு நிகழ்ச்சியில்
பிறப்பு5 சூன் 1956 (1956-06-05) (அகவை 64)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
இருப்பிடம்சென்னை
தேசியம்இந்தியன்
பணிநடிகர், தயாரிப்பாளர் (திரைப்படம்), பெண் தொழிலதிபர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1959 முதல் தற்போது வரை
குறிப்பிடத்தக்க படைப்புகள்குழந்தையும் தெய்வமும், கிருஷ்ணதாசி, ராமானுஜர்(தொலைக்காட்சித் தொடர்), )ரோமாபுரி பாண்டியன்
பிள்ளைகள்கீர்த்தான ஃபான்னிங், ரிதினேகா நேபால், ஆர்யா நேபால்
வலைத்தளம்
http://www.vaishnaves.com

குட்டி பத்மினி (Kutty Padmini) ஒரு தென்னிந்தியத் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகையாவார். கோலிவுட் படவுலகில் பிரதானமாக பணி புரிந்து வருகிறார். 1959இல் "ஆம்பள அஞ்சுலம்" எனறப் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தெலுங்கு , கன்னடம், மலையாளம் மற்றும் இந்தித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1] இவர் தனது மூன்றாவது வயதில் தமிழகத் திரைப்படத்துறையில் அறிமுகமானார். சிவாஜி கணேசன், ம. கோ. இராமச்சந்திரன், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், ரசினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் உட்பட தமிழ் சினிமாவின் பல முக்கிய நபர்களுடன் நடித்துள்ளார். குழந்தையும் தெய்வமும் திரைப்படத்திற்காக சிறந்த குழந்தை கலைஞருக்கான தேசிய திரைப்பட விருதை வென்ற முதல் பெண் குழந்தை நட்சத்திரக் கலைஞராவார். களத்தூர் கண்ணம்மா படத்தில் நடித்ததற்காக கமல்ஹாசன் முதல் முறையாக இவ்விருதினை பெற்றுள்ளார்.[2]

குட்டி பத்மினி, பெண்மணி அவள் கண்மணி, அவள் அப்படித்தான், அவர்கள், சகலகலா சம்மந்தி போன்றத் திரைப்படங்களில் துணை நடிகையாகத் தன்னை வளர்த்துக் கொண்டார், அவரது வைஷ்ணவி ஃபிலிம்ஸ் எண்டெர்பிரசஸ் லிமிடெட் என்ற தொலைக்காட்சி நிறுவனம் மூலம், "கிருஷ்ணதாசி", மற்றும் "ராமானுஜர்" போன்ற பல சிறந்த படைப்புகளை தயாரித்தார்.[3] தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாக உறுப்பினராகவும் இருக்கிறார்.[4]

தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் பின்னணி[தொகு]

குட்டி பத்மினி சென்னையில் ஆச்சாரமான ஒரு ஐயங்கார் குடும்பத்தில் 1956 ஜூன் 5 அன்று பிறந்தார். இவருடைய தந்தை ஸ்ரீனிவாச சகரவர்த்தி மெட்ரோ கோல்ட்வின் மாயர் என்ற நிறுவனத்தின் இந்தியக் கிளையின்பொது மேலாளாராக பணி புரிந்துள்ளார், மற்றும் ஒரு தயாரிப்பாளரகவும் இருந்துள்ளார், இவருடைய தாயார் ராதா பாய் அவரது காலத்தில் ஒரு புகழ்பெற்ற நடிகையாவார். ஜென்டில்மேன், அக்னி நட்சத்திரம் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட கோலிவுட் படங்களில் நடித்துள்ளார், 3 வயதில் சினிமாவில் நுழைந்ததனால் குட்டி பத்மினிக்கு சரியான பள்ளிக் கல்வி கிடைக்கவில்லை.

தொழில்[தொகு]

குட்டி பத்மினி தனது 3 வயதில் 3 வயதில் சினிமாவில் நுழைந்தார், குழந்தையும் தெய்வமும் என்றப் படத்தில் ஜெய்சங்கர் மற்றும் ஜமுனா ஆகியோருடன் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இதற்காக சிறந்த குழந்தை கலைஞருக்கான தேசிய திரைப்பட விருதை.[5] "பாசமலர்", "நவராத்திரி", "லேத மனசுலு", "ஓடையில் நின்னு" போன்ற பலத் திரைப்படங்களில் நடித்துள்ளார், திருவருட்செல்வர் திரைப்படத்தில் இளவயது பொன்னனாக தோன்றி அரசனின் மூன்று கேள்விகளுக்கு பதிலளிப்பவராக நடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். மேலும் திருமால் பெருமைத் திரைப்படத்தில் இளைய ஆண்டாளாக வேடத்தில் பரவலாக பாராட்டப்பட்டார்.[6]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குட்டி_பத்மினி&oldid=2701175" இருந்து மீள்விக்கப்பட்டது