குட்டியாரி லால் துவேஷ்
குட்டியாரி லால் துவேஷ் | |
---|---|
உத்தரப் பிரதேசத்தின் 16வது சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் மார்ச் 2012 – 2017 | |
முன்னையவர் | ஜுல்பிகர் அகமது பூட்டோ |
பின்னவர் | கிரிராஜ் சிங் தர்மேஷ் |
தொகுதி | ஆக்ரா கன்டோன்மென்ட் சட்டமன்றத் தொகுதி |
உத்தரப் பிரதேசத்தின் 15வது சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் மே 2007 – மார்ச் 2012 | |
முன்னையவர் | ராம் பாபு ஹரித் |
தொகுதி | ஆக்ரா மேற்கு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 12 பெப்ரவரி 1970 பரத்பூர் |
குடியுரிமை | இந்தியர் |
தேசியம் | இந்தியா |
அரசியல் கட்சி | பகுஜன் சமாஜ் கட்சி |
துணைவர் | முன்னி தேவி துவேஷ் |
பெற்றோர் | அகாலி ராம் (தந்தை) |
வாழிடம்(s) | ஆக்ரா, (உத்தரப் பிரதேசம்) |
தொழில் | தொழிலதிபர் & அரசியல்வாதி |
குட்டியாரி லால் துவேஷ் (Gutiyari Lal Duwesh) ஒரு இந்திய அரசியல்வாதியாவார். உத்தரப் பிரதேசத்தின் 15, 16 ஆவது சட்டமன்றங்களில் உறுப்பினராக இருந்தார். இவர், ஆக்ரா கன்டோன்மென்ட் சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். உத்தரபிரதேசத்தில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் அரசியல் கட்சி உறுப்பினராக இருந்த இவர், 12 மார்ச் 2019 அன்று, பகுஜன் சமாஜ் கட்சியை விட்டு வெளியேறி லக்னோவில் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். [1][2][3]
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
[தொகு]1970 ஆம் ஆண்டு இராசத்தான் மாநிலத்தில் பரத்பூரில் உள்ள பர்தாய் என்ற கிராமத்தில் பிறந்தார். இவர் பட்டியல் பழங்குடியின சமூகத்தைச் (ஜாதவ்) சார்ந்தவர். உயர்நிலை பள்ளிக் கல்வி வரையே பயின்றார். அரசியலில் சேரும் முன், ஒரு தொழிலதிபராக இருந்தார்.[1]
அரசியல் வாழ்க்கை
[தொகு]குட்டியாரி, பகுஜன் சமாஜ் கட்சியின் உறுப்பினராக இரண்டு முறை (2007 & 2012) சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இவரது இரண்டு பதவிக் காலங்களிலும், ஆக்ரா மேற்கு ("பாராளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகள் ஆணை, 2008"க்கு பிறகு அது இல்லாமல் போனது) மற்றும் ஆக்ரா கன்டோன்மென்ட் சட்டமன்றத் தொகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1][4]
இடுகைகள்
[தொகு]# | முதல் | முடிய | பதவி | குறிப்பு |
---|---|---|---|---|
01 | 2007 | 2012 | உறுப்பினர், 15வது சட்டமன்றம் | |
02 | 2012 | 2017 | உறுப்பினர், 16வது சட்டமன்றம் |
இதையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "Profile". Uttar Pradesh Legislative Assembly website. http://uplegisassembly.gov.in/ENGLISH/pdfs/members_profile/87.pdf. பார்த்த நாள்: May 30, 2015.
- ↑ "2007 Election Results". இந்தியத் தேர்தல் ஆணையம் website. http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_2007/StatReport_AS_2007_UTTAR_PRADESH.pdf. பார்த்த நாள்: May 30, 2015.
- ↑ "2012 Election Results". இந்தியத் தேர்தல் ஆணையம் website. http://eci.nic.in/eci_main/StatisticalReports/AE2012/Stats_Report_UP2012.pdf. பார்த்த நாள்: May 30, 2015.
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008". இந்தியத் தேர்தல் ஆணையம் official website. http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf. பார்த்த நாள்: May 30, 2015.