குட்டிக்கண்ணன் (விடுதலைப் புலி உறுப்பினர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

குட்டிக்கண்ணன் (திருஞானசம்மந்தமூர்த்தி அரசலிங்கம், சிலம்பரசன் 12.05.1982 - 05.06.2000) குறிப்பிடத்தக்க ஒரு பாடகர். வீதி நாடக நடிகர். விடுதலைப் புலிகளின் போராட்டக்கலைஞர். விடுதலைப்புலிகளின் போராளி. இவர் பாடிய ஆண்டாண்டு காலமதாய் நாம் ஆண்டுவந்த பூமி பாடல்[1] தனித்துவமாய் அமைந்து இவருக்குப் பெருமை சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

இவர் குச்சவெளி, திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். முல்லைத்தீவு சுண்டிக்குளம் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் இரு டோறா பீரங்கிப் படகுகள் மூழ்கடிக்கப்பட்ட சமரில் வீரச்சாவு அடைந்தார்.[2]

இவரது குரலில் தமிழீழத்தில் ஒலித்த முதல் பாடல்[தொகு]

ஐந்தடி கூட்டுக்குள்ளே
ஐம்பது பேரை போட்டடைத்தான்
அம்மா என்று சத்தமிட்டால்
அடியும் உதையும் தாராதவன்

இவர் பாடிய பாடல்களில் சில[தொகு]

 • ஆண்டாண்டு காலமதாய் நாம் ஆண்டு வந்த பூமி
 • அன்பிற்கு அர்த்தமாய் அண்ணா நீ என்னைக்கும் நிகரே அண்ணா
 • டப்பாங்கூத்து பாட்டுத்தான் காதிலை கொஞ்சம் போட்டுப் பாரு
 • எங்கள் அண்ணன் பிரபாகரன் தமிழ் ஈழம் தந்த கருணாகரன்
 • குக்கூ குக்கூ குயிலக்கா கொஞ்சம் நில்லக்கா
 • பாரதி போல மீசை வைச்ச அப்பாவே
 • சிட்டுக் குருவி மெட்டுப் போட்டு பாட்டுப் பாடுது
 • சிறகு விரிக்கும் பறவைக்கிங்கே சின்னச் சின்னக் கூடு
 • தர்மம் ஒரு நாள் ஒரு நாள் தலையை நிமிர்த்தி தலைவன் கதை கேட்கும்

நடித்த தெருவழி நாடகங்கள்[தொகு]

 • இரும்புத்திரை
 • ஒளி பிறந்தது
 • கூடுகலைந்த குருவிகள்
 • வீரம் விளையும் பூமி

இவற்றையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்சான்றுகள்[தொகு]

 1. http://www.tamilwin.com/show-RUnwyEQUmBNam.html
 2. http://www.veeravengaikal.com/maaveerar/index.php/maaveerarlist?view=maaveerarlistdetails&Itemid=117&cid=15543