குட்டம் பொக்குண

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குட்டம் பொக்குணவின் ஒரு தோற்றம்

குட்டம் பொக்குண என்பது இலங்கையின் பண்டைக் காலத் தலைநகரமான அனுராதபுரத்தில் உள்ள நீராடுவதற்காக அமைக்கப்பட்ட ஒரு குளம் ஆகும். குட்டம் பொக்குண என்பதற்குச் சிங்கள மொழியில் "இரட்டைக் குளம்" என்று பொருள். இக்குளம் இரண்டு பகுதிகளாக அமைக்கப்பட்டிருப்பதே இப்பெயருக்குக் காரணம். இக்குளம் அக்காலத்து நீரியற் பொறியியல் துறையில் குறிப்பிடத்தக்க ஒரு சாதனை எனக் கருதப்படுகிறது. அத்துடன் இது சிங்களவர்களின் சிற்பக்கலை, கட்டிடக்கலை என்பன தொடர்பில் சிறந்த படைப்புக்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.

அளவு[தொகு]

இவ்விரட்டைக் குளங்களில் ஒன்று பெரியது, மற்றது சிறியது. பெரிய குளத்தின் நீளம் 132 அடியும் அகலம் 51 அடியுமாகும். சிறிய குளத்தில் நீள அகலங்கள் முறையே 91 அடியும், 51 அடியுமாகும். பெரிய குளத்தின் ஆழம் 18 அடி. சிறிய குளம் 14 அடி ஆழம் கொண்டது.

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குட்டம்_பொக்குண&oldid=3240620" இருந்து மீள்விக்கப்பட்டது