குட்சுல்ஷ்சினா மற்றும் போகுட்டா நாட்டுப்புற கலை தேசிய அருங்காட்சியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
The main museum building.
முக்கிய அருங்காட்சியக கட்டிடம்.

யெஹோஷாபத் கோப்ரின்ஸ்கி நாரியோலஸ் குட்சுல்ஷினா ஆண்டிஸ் போகுட்டியா நாட்டுப்புற கலை அருங்காட்சியகம் உக்ரைனியன்: Національний Музей Народного Мистецтва Гуцульщини та Покуття імені Йосафата Кобринського ) உக்ரைனின் கொலோமியாவில் உள்ள ஒரு நாட்டுப்புற கலை தேசிய அருங்காட்சியகமாகும்., இது ஹட்சுல்ஷினா மற்றும் பொகுட்டியா பகுதிகளின் வரலாறு மற்றும் நாட்டுப்புற கலாச்சாரத்தை ஆவணப்படுத்தும் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்களின் சேகரிப்பை கொண்டுள்ளது.

வரலாறு[தொகு]

இந்த அருங்காட்சியகம் 1926 இல் நிறுவப்பட்டாலும் 1934 ஆம் ஆண்டின் இறுதியில் தான் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது. இது நகர மையத்தில் உள்ள முன்னாள் மக்கள் மாளிகை கட்டிடத்தில் அமைந்துள்ளது. இது யெஹோஷாபத் கோப்ரின்ஸ்கியின்(1818-1901) நினைவாக பெயரிடப்பட்டது. 1945 ஆம் ஆண்டில், இது குட்சுல்ஷ்சினா நாட்டுப்புற கலைக்கான மாநில அருங்காட்சியகம் என்று பெயரிடப்பட்டது. தற்போதைய அருங்காட்சியகம் மூன்று முக்கியமான பிரிவுகளைக் கொண்டுள்ளது:

ஹட்சுல் மற்றும் பொக்குட்டியான் கிராமங்களில் இருந்து அலங்கரிக்கப்பட்ட அடுப்பு ஓடுகள், இசைக்கருவிகள், செதுக்கப்பட்ட பழங்கால மரக் கருவிகள், தளபாடங்கள், பண்டைய நாட்டுப்புற உடைகள், தனித்துவமான ஹட்சுல் பூவேலைப்பாடுகள, [2] சுவரில் தொங்கவிடும் தோரணைகள் மற்றும் பாரம்பரிய ஹட்சுல் அச்சுகளின் தொகுப்பு ஆகியவை முக்கிய கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. [3]

கொலோமியாவின் வரலாற்றை ஆவணப்படுத்தி பிராந்திய நாட்டுப்புற கலைப்பொருட்களை சேகரிக்கும்படி ஒரு அருங்காட்சியகத்தை உருவாக்க சில முயற்சிகள் செய்யப்பட்டு இருந்தாலும், முதன்முதலில் 1892 இல் ஒரு தனியார் தொல்பொருள் சேகரிப்பாளரும் தொல்பொருள் ஆராய்ச்சியில் ஆர்வமுள்ள எட்மண்ட் ஸ்டார்சென்ஸ்கி (1845-1900)தான் பொகுட்டியா பிராந்தியத்தில் ஒரு தனியார் அருங்காட்சியகத்தை அமைத்தார். ஒரு நூலகம் மற்றும் ஒரு தொல்பொருட்களுக்கான அருங்காட்சியகம் என இரு  பிரிவுகளாக அமைக்கப்பட்ட இதில் தொன்மையான கலைப்பொருட்களும், இயற்கையாக கிடைக்கும் பண்டைய பொருட்களும் மட்டுமல்லாது   உக்ரேனிய இனவியல் பொருட்களும் சேகரிக்கப்பட்டு தொகுத்து அவரது வீட்டிலேயே வைத்திருந்தார். சுமார் 1900 ஆம் ஆண்டில் தனது முழு சேகரிப்பையும் அவரது வாரிசான மகனுக்கு கொடுத்தார். பின்னர், 1909 ஆம் ஆண்டில் அதன் ஒரு பகுதி கிராகோவில் உள்ள தேசிய அருங்காட்சியகத்திற்கு வழங்கப்பட்டது. [4]

1913 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பொகுட்டியா பிராந்தியத்தின் அருங்காட்சியகம் புத்துயிர் பெற்றது, எட்மண்டின் மனைவியான, ப்ரோனிஸ்லாவா ஸ்டார்சென்ஸ்கா, அவரது கணவர் மற்றும் மகனின் மரணத்திற்குப் பிறகு, சமூகப் பள்ளியின் சங்கத்திற்கு அவரிடமுள்ள மீதி குடும்ப சேகரிப்பையும் தானமாகக் கொடுத்தார், மேலும் அருங்காட்சியகம் பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டது. இந்த மக்களின் அருங்காட்சியகத்தின் தலைவராக அன்டோனி சிடோரோவிச் பொறுப்பேற்று நடத்தியுள்ளார். இங்கே சேகரித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 755 இனவியல் மற்றும் வரலாற்றுப் பொருள்கள் மற்றும் சில நூறு பழங்கால நாணயங்களின் சேகரிப்புக்கள், முதலாம் உலகப் போரின் நிகழ்வுகளில் (முதலில் 1914 மற்றும் பின்னர் 1917 இல்) அழிக்கப்பட்டது. வரலாற்று அறிக்கைகளின்படி, அவற்றில் எதுவுமே காப்பாற்றப்பட்டதற்கான எந்த ஆதாரமும் காணப்படவில்லை.

காட்சித்தொகுப்புகள் (அருங்காட்சியகத்தில் உள்ள பொருட்கள்)[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Retrospective View | National Museum of Hutsulshchyna and Pokuttya Folk Art | Kolomyya IF Ukraine". hutsul.museum. பார்க்கப்பட்ட நாள் 2017-10-29.
  2. Yaroslava, Tkachuk (2010). Nykorak, Olena. ed. The embroidery collection of the Y. Kobrynskyi National Museum of Folk Art, in: Hutsul Embroidery: From the Collection of the Kobrynsky National Museum of Folk Art, Kolomyia, Ukraine. Rodovid. பக். 42–58. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-966-7845-54-4. 
  3. Ukraine. Lonely Planet Publications Pty Ltd. 2011. பக். 125. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-74179-328-4. 
  4. Bodzek, Jarosław (1995). "Ancient Greek coins from the collection of Edmund Starzeński". Studies in Ancient Art and Civilization (Cracow) 7: 79–80. 

வெளி இணைப்புகள்[தொகு]