குடோபு மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குடோபு
போடோ கடாபா
ଗଦବା
நாடு(கள்)இந்தியா
பிராந்தியம்ஒடிசா, ஆந்திரப் பிரதேசம்
இனம்கடாபா மக்கள்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
10-15,000  (2008)[1]
ஆசுத்ரோ-ஆசிய மொழிகள்
ஒடிய எழுத்துரு
மொழிக் குறியீடுகள்
ISO 639-3gbj
மொழிக் குறிப்புbodo1267[2]

குடோபு அல்லது போடோ கடபா மொழி என்பது இந்தியாவின் ஆசுத்ரோ-ஆசிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த தென் முண்டா மொழியாகும், ஒடிசாவின் கோராபுட் மாவட்டம் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினம் மாவட்டங்களில் இம்மொழி பேசுபவர்கள் அதிக அளவில் உள்ளனர். இது வேறு வகையில் கடபா மொழி என்றும் அறியப்படுகிறது, ஆனால் இது திராவிட கடாபா மொழியிலிருந்து வேறுபட்டது. போடோ கடபா மொழிக்கான பிற பெயர்களில் கட்பா, குடோப், குட்வா, கோட்வா, கட்வா மற்றும் போய் கடபா ஆகியவை அடங்கும்.

வகைப்பாடு[தொகு]

குடோபு மொழியானது ஆசுத்ரோ-ஆசிய மொழி குடும்பத்தின் முண்டா கிளையின் தெற்கு முண்டா துணைக்குழுவிற்குச் சொந்தமானது. இது போண்டோ மொழியுடன் மிக நெருங்கிய தொடர்புடையது. [3]

பரவல்[தொகு]

குடோபு தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரப் பிரதேசத்தின் அருகிலுள்ள மாவட்டங்களில் பேசப்படுகிறது, மேலும் இம்மொழியைப் பேசுபவர்கள் முதன்மையாக தெற்கு ஒடிசாவின் கோராபுட் மாவட்டத்தில் உள்ள லாம்ப்டாபுட் தொகுதியில் குவிந்துள்ளனர். (கிரிஃபித்ஸ் 2008:634). சமீபத்திய நூற்றாண்டுகளில், குடோபு மொழி பேசுபவர்கள் ஆந்திரப் பிரதேசத்தின் சமவெளி மற்றும் ராயகடா மாவட்டத்திற்கு குடிபெயர்ந்துள்ளனர், இதில் மஜிகுடா (கல்யாண்சிங்பூருக்கு அருகில்) நகரம் உட்பட, இவர்கள் திராவிட மொழி பேசும் கொண்டா மக்களுடன் சேர்ந்து வாழ்கின்றனர்.

எத்னோலாக் என்ற உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் மொழிகளைப் பற்றிய கலைக்களஞ்சியம் ஒன்று இம்மொழி பேசுபவர்கள் வாழ்ந்து வரும் இடங்களாகப் பின்வரும் இடங்களைப் பட்டியலிடுகிறது.

மொழியின் நிலை[தொகு]

குடோபு மொழியானது அழிந்து வரும் அல்லது அழிந்து வரும் அருகிய நிலையில் இருப்பதாகக் கருதப்படுகிறது, பல நீர்மின் திட்டங்களால் குடோபு மக்களை அவர்களது பாரம்பரிய கிராமங்களில் இருந்து வெளியேற்றி, முதன்மையாக தேசிய மொழி பேசும் கிராமங்களில் சிறுபான்மையினராக வாழ வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. ஆண்டர்சன் (2008) இம்மொழி பேசுபவர்களின் எண்ணிக்கையை சுமார் 10 முதல் 15,000 வரை என்று மதிப்பிடுகிறார், அதே சமயம் கோராபுட்டில் பணிபுரியும் ஆஷா கிரண் சமூகம் 5,000-இற்கும் குறைவான எண்ணிக்கையை மதிப்பிடுகிறது. 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் குடோபு மற்றும் ஒல்லாரி ஆகியவை ஒரே மொழியாகக் கணக்கிடப்ட்டுள்ளது. ஏனெனில், அவை இரண்டும் வெளியாட்களால் கடபா என்று அழைக்கப்படுகின்றன. குடோபு-மொழிக் கல்விக்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டாலும், அது கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டது. பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் வெவ்வேறு மொழி பேசும் இயல்புள்ள கிராமங்களில் இருப்பதால் தேசிய மொழியைக் கற்க மட்டுமே விரும்புகிறார்கள். [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Voß, Judith (2015-01-01). "Person markers in Gutob". Journal of South Asian Languages and Linguistics 2 (2). doi:10.1515/jsall-2015-0011. பன்னாட்டுத் தர தொடர் எண்:2196-0771. http://dx.doi.org/10.1515/jsall-2015-0011. 
  2. Nordhoff, Sebastian; Hammarström, Harald; Forkel, Robert ஏனையோர்., தொகுப்பாசிரியர்கள் (2013). "Bodo Gadaba". Glottolog 2.2. Leipzig: Max Planck Institute for Evolutionary Anthropology. http://glottolog.org/resource/languoid/id/bodo1267. 
  3. Ethnologue report on the Bodo Gadaba language
  4. "Literature development in minority language: Case study of Gutob–Gadaba Language Revitalization Project in India" (in .pdf format)
"https://ta.wikipedia.org/w/index.php?title=குடோபு_மொழி&oldid=3678850" இலிருந்து மீள்விக்கப்பட்டது