குடைக்குள் மழை
| குடைக்குள் மழை | |
|---|---|
| இயக்கம் | ஆர். பார்த்திபன் |
| தயாரிப்பு | பார்த்திபன் |
| கதை | பார்த்திபன் |
| இசை | கார்த்திக் ராஜா |
| நடிப்பு | பார்த்திபன் மதுமிதா (நடிகை) சிறீமன் |
| ஒளிப்பதிவு | பி. எல். சஞ்சய் |
| படத்தொகுப்பு | ராம் சுதர்சன் சுரேஷ் ராஜன் |
| கலையகம் | பயோஸ்கோப் ஃபிலிம் ஃபிரேமர்ஸ் |
| வெளியீடு | 3 செப்டம்பர் 2004 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
குடைக்குள் மழை (Kudaikul Mazhai) என்பது இயக்குநர் பார்த்திபன் எழுதி, இயக்கி, தயாரித்த 2004 ஆம் ஆண்டு தமிழ் மொழி நாடகத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் மதுமிதா முக்கிய கதாபாத்திரத்திலும், சிறீமன் துணைக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்பட்டது. வசூல்ரீதியாகவும் இத்திரைப்படம் சுமாரான வெற்றியடைந்தது.
கதைக்களம்
[தொகு]வெங்கட் (பார்த்திபன்) திடீரென்று ஒரு மிக அழகான, நவீனமான, பெண் மதுமிதா (மதுமிதா) எல்லா இடங்களிலும் அவரைப் பின்தொடர்ந்து, அவர் மீதான தனது அன்பை வெளிப்படுத்துகிறார். மதுமிதா தனது தகுதிக்கு மீறிய காதலி என்பதைப் புரிந்து கொள்ளும் வெங்கட், அவளிடம் கூட, தான் நினைப்பதைத் தெரிவிக்கிறார். ஆனால், அவள் ஒரு வெறித்தனமான காதல் உணர்வை வெளிப்படுத்தும் போது, வெங்கட் மதுமிதாவின் காதலுக்கு அடிபணிகிறார். இந்தக் காதலை ஏற்றுக் கொண்ட போது இவரது அழிவு தொடங்குவதாக வெளிப்படுத்தப்படுகிறது. ஏனெனில், அது எப்போதும் ஒரு கேலிக்கூத்தாக இருந்து வருகிறது. மென்மையான நடத்தை கொண்ட வெங்கட்டுக்கு இந்த அதிர்ச்சி மிக அதிகமானதாக உள்ளது. இது வெங்கட்டிடம் பாதிக்கப்பட்ட, நெகிழ் மனம் கொண்ட மனப்பிறழ்வு போக்குகளை உருவாக்கத் தொடங்குகிறது.
நடிகர்கள்
[தொகு]- டிக்சன் ராஜாக பார்த்திபன்
- மதுமிதா மதுமிதா
- ஸ்ரீமன்
- தீபா வெங்கட்
தயாரிப்பு
[தொகு]இந்தப் படத்திற்கு முதலில் நீ + நான் என்று பெயரிடப்பட்டிருந்தாலும், பார்த்திபன் அதற்கு குடைக்குள் மழை என்று பெயர் மாற்றத் தேர்ந்தெடுத்தார். இத்திரைப்படத்தின் கதை கதாநாயகனின் முதல் காதல் பற்றியது, மேலும் இந்த அனுபவம் ஒரு குடையின் உள்ளே மழை அனுபவத்தை உருவகப்படுத்துகிறது என்பதாக அவர் உணர்ந்தார்.[1] காட்சிகளை அதிநவீன நுட்பங்களைப் பயன்படுத்தி, பொதுவாக இரவில் படமாக்கப்பட்ட காட்சிகளுடன், நிலையான ஒளிப்படக்கருவி மற்றும் 435 வகை ஒளிப்படக்கருவிகள் மூலம் படமாக்கினர்.[2] பல காட்சிகள் பல்லாவரத்தில் கலை இயக்குனர் ஆர். கே. விஜயமுருகனால் அமைக்கப்பட்ட ஒரு பெரிய படப்பிடிப்பு அரங்கில் படமாக்கப்பட்டன.[3] படம் சிறிய அளவிலான விளம்பரப் பணியுடன் நிறைவடைந்தது, பார்த்திபன் தனது பார்வையாளர்கள் படம் பற்றிய முன்கூட்டிய யோசனைகளுடன் திரை அரங்குகளுக்கு வருவதை விரும்பவில்லை என்று குறிப்பிட்டார்.[4]
ஒலிக்கோர்வை
[தொகு]இத்திரைப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். பாடல் வரிகளை நா. முத்துக்குமார் மற்றும் பார்த்திபன் ஆகியோர் எழுதியுள்ளனர்.[5]
வெளியீடு மற்றும் வரவேற்பு
[தொகு]தி இந்து இதழில் மாலதி ரங்கராஜன், இத்திரைப்படம் "வழக்கமான கட்டமைப்பிலிருந்து குறிப்பிடத்தக்க அளவில் மாறுபட்டிருப்பதாகவும் இருப்பினும், பார்வையாளர்களுக்கு ஒரு புதிய கருப்பொருளை வழங்குவதில் படைப்பாளர் பார்த்திபன் சறுக்கியுள்ளார் எனவும் குறிப்பிட்டிருந்தார். மேலும், கருப்பொருளைப் பொறுத்தவரை அவர் இயன்ற வரை செய்துள்ளதாகவும் கூறியிருந்தார். சிபியின் விமர்சகர் "வணிக வடிவத்திற்குள், ஒரு வித்தியாசமான திரைப்படத்தை உருவாக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளார்" என்று குறிப்பிட்டார்.[6] கல்கி விஷுவல் தாசன் இந்தப் படத்தை ஒரு காட்சிக் கவிதை என்று அழைத்தார், மேலும் தமிழ் சினிமாவின் அடிபடு வழக்குகளை உடைத்ததற்காக பார்த்திபனைப் பாராட்டினார்.[7] சென்னை ஆன்லைன், தமிழ் திரைப்படத்தைப் பொருத்தவரை திரைக்கதை மற்றும் கதை பாணியில் இது ஒரு புதுமையான பரிசோதனை என்று குறிப்பிட்டிருந்தது. மேலும், தயாரிப்பாளர், திரைப்பட-எழுத்தாளர்- இயக்குநர்- கதாநாயகன் என பார்த்திபன் ஒரு துணிச்சலான முயற்சியாக, திரைப்படத் தயாரிப்பாளர்களால் இதுவரை தொடப்படாத ஒரு அசாதாரண கருத்தை பரிசோதிக்க இங்கே மேற்கொண்டுள்ளதாகவும் திரைக்கதை இரண்டு கதாபாத்திரங்களைச் சுற்றி வருவதாகவும், பெரும்பாலான நேரங்களில் காட்சியில் இரண்டு கலைஞர்களை மட்டுமே கொண்டிருப்பதாகவும் மேலும், காட்சிகளை இரண்டு முக்கிய இடங்களில் மட்டுமே திட்டமிடவும் செய்துள்ளது ஒரு முன்மாதிரி முயற்சி எனவும் குறிப்பிடப்பட்டது.[8]
இருப்பினும், வசூல்ரீதியாக ஒரு எதிர்பார்க்கப்பட்ட அளவை எட்டத் தடுமாறியது. பார்த்திபன் கூறும் போது "அதன் நேரத்தை விட மிகவும் முன்னால்" இருப்பதாகக் கூறினார்.[9] இத்திரைப்படத்தில் மதுமிதாவின் நடிப்பு நல்ல வரவேற்பைப் பெற்றது, மேலும் குடைக்குள் மழை வெளியான உடனேயே அவருக்கு பல தமிழ்த் திரைப்பட வாய்ப்புகள் வந்தன.[10]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "'Kudaikkul Mazhai' will click: Parthipan". சிஃபி. 1 September 2004. Archived from the original on 24 September 2004. Retrieved 1 December 2016.
- ↑ "Kudaikkul Mazhai". சிஃபி. Archived from the original on 22 April 2014. Retrieved 1 December 2016.
- ↑ Mannath, Malini (5 August 2004). "Kudaikkkul Mazhai". Chennai Online. Archived from the original on 16 October 2006. Retrieved 18 January 2023.
- ↑ "An interesting package". தி இந்து. 18 June 2004. Archived from the original on 20 November 2004. Retrieved 1 December 2016.
- ↑ "Kudaikkhul Mazhai (Original Motion Picture Soundtrack)". ஆப்பிள் மியூசிக். 18 April 2013. Archived from the original on 19 January 2023. Retrieved 19 January 2023.
- ↑ "Kudaikkul Mazhai". சிஃபி. 3 September 2004. Archived from the original on 22 April 2014. Retrieved 1 December 2016.
- ↑ தாசன், விஷுவல் (12 September 2004). "குடைக்குள் மழை". Kalki. pp. 72–73. Retrieved 18 January 2023.
- ↑ Mannath, Malini (10 September 2004). "Kudaikul Mazhai". Chennai Online. Archived from the original on 4 February 2007. Retrieved 15 August 2024.
- ↑ "On a journey". 24 March 2013 இம் மூலத்தில் இருந்து 7 April 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140407094135/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/on-a-journey/article4542831.ece.
- ↑ "Having a ball". 18 April 2008 இம் மூலத்தில் இருந்து 9 November 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121109054340/http://www.hindu.com/cp/2008/04/18/stories/2008041850030100.htm.