குடிப் பூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சங்ககாலத்தில் சிற்றூர் மக்கள் பல குடும்பங்கள் ஒன்று சேர்ந்து கூட்டம் கூட்டமாக வாழ்ந்துவந்தனர். அவர்களில் பெரும்பாலோர் ஒரே குடியைச் சேர்ந்த மக்கள். இந்தக் குடியினருக்குத் தனித்தனி அடையாளப் பூக்கள் இருந்தன. அவற்றை அக் குடியைச் சேர்ந்த ஆடவர் தம் தலையில் சூடிக்கொண்டனர். பூவின் அகர வரிசையில் அக்குடியைச் சேர்ந்த மக்களை இங்குத் தொகுத்துக் காணலாம்.

மூவேந்தர் குடிப்பூ[1][தொகு]

  • ஆர் (ஆத்தி) - சோழர்
  • குல்லை - வடுகர் பெருமகன் கட்டி (குறுந்தொகை 11)
  • போந்தை (பனை) - சேரர்
    • பனங்குருத்து மாலைகளைத் தலையில் சூடிக்கொண்டனர்.[2]
  • வேம்பு - பாண்டியர்

அடிக்குறிப்பு[தொகு]

  1. போந்தை வேம்பே ஆர் என வரூஉம் மா பெருந் தானையர் மலைந்த பூவும் - தொல்காப்பியம் புறத்திணையியல் நூற்பா 4-4
  2. மறங்கெழு போந்தை வெண்தோடு புனைந்து நிறம் பெயர் கண்ணி - பதிற்றுப்பத்து 51
"https://ta.wikipedia.org/w/index.php?title=குடிப்_பூ&oldid=1339782" இலிருந்து மீள்விக்கப்பட்டது