குடிபந்தே பூர்ணிமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குடிபந்தே பூர்ணிமா (முனைவர் ச. பெ. பூர்ணிமா) இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த கன்னட கவிஞரும், எழுத்தாளரும் நாவலாசிரியருமாவார்.[1] கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் உள்ள சரவணபெலகோலாவில் பிறந்த பூர்ணிமா, பெங்களூர் பல்கலைக்கழகத்தில் கன்னட இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும், பிராகிருதத்தில் முதுகலைப் பட்டமும், மைசூர் பல்கலைக்கழகத்தில் சமணவியலில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். மேலும் 1982 மற்றும் 1983 ஆண்டுகளில் கன்னட இலக்கிய மன்றத்தின் தலைவராகவும் இருந்துள்ளார்.

நாவல்கள், கவிதைத் தொகுப்புகள், கட்டுரைத் தொகுப்புகள், ஆராய்ச்சி, மற்றும் சுயசரிதைகள் என்பது போன்ற பல்வேறுபட்ட இலக்கிய வகைகளின் கீழ் அறுபதிற்கும் மேற்பட்ட நூல்களை கன்னட மொழியில் எழுதி வெளியிட்டுள்ளார்.[2] நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளோடு, பல கன்னட வார, மாத இதழ்களிலும், செய்தித்தாள்களிலும் பத்திரிகைகளிலும்  பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகளை எழுதியுள்ளார்.[3]

2013ஆம் ஆண்டு கர்நாடகாவின் சிட்லகட்டாவில் நடைபெற்ற சிக்கபல்லாபுரா மாவட்ட கன்னட சாகித்ய சம்மேளனத்திற்கு இவர் தலைமை வகித்துள்ளார்.

விருதுகளும் கௌரவங்களும்[தொகு]

குடிபந்தே பூர்ணிமா

 • சாகித்ய அகாடமி விருது,
 • ஸ்ரீ கோமதேஸ்வரா வித்யாபீட விருது,
 • மல்லிகா விருது,
 • சாரதா சேவா ஸ்ரீ
 • ஸ்ரீ விஸ்வேஸ்வரய்யா இலக்கிய விருது
 • வித்வத் விருது
 • மேட் சாரதாதேவி விருது
 • தாலுக் ராஜ்யோத்சவா போன்ற பல விருதுகளை இவரது இலக்கிய படைப்புகளுக்காக பெற்றுள்ளார்.[4]

கருநாடக எழுத்தாளர்களின் சங்கம், என்ற கர்நாடக பெண் எழுத்தாளர்களின் அமைப்பானது இவரது பெயரில் "கவிஞர்களுக்கான குடிபந்தே பூர்ணிமா விருதுகள்" என்று அழைக்கப்படும் ஒரு விருதை நிறுவி, ஆண்டுதோறும் முக்கியமான கன்னட பெண் இலக்கிய படைப்பாளர்களுக்கு விருது வழங்கி வருகிறது. [5]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Gallery - Category: Pampa Jayanthi Celebrations at Bengaluru - October 24, 2010 - Image: Renowned Kannada writer Smt. Gudibande Poornima was also one among the highest marks s..." Archived from the original on 2 April 2015. பார்க்கப்பட்ட நாள் 9 January 2013.
 2. Gudibande Poornima Books Products at Sapna Online
 3. Bhushan, Ravi (2003). Reference India. Rifacimento International. பக். 81. https://books.google.com/books?id=HWVmAAAAMAAJ&q=gudibande. 
 4. https:https://www.bookbrahma.com/author/gudibande-poornima
 5. The Hindu : Karnataka News : Anupama Award presented to Sunandamma
"https://ta.wikipedia.org/w/index.php?title=குடிபந்தே_பூர்ணிமா&oldid=3673704" இலிருந்து மீள்விக்கப்பட்டது