குடிநிலை உரைத்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புறநானூற்றுப் பாடல்களுக்குத் தரப்பட்டுள்ள துறைகளில் குடிநிலை உரைத்தல் என்பது ஒன்று. இது கரந்தைத் திணையின் துறை. புறநானூற்றில் இத்துறைப் பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. பாடல் எண் 290

இலக்கண நூல் விளக்கம்[தொகு]

இலக்கியம்[தொகு]

ஔவையார் பாடிய இந்தப் பாடல் வீரன் ஒருவனின் முன்னோரின் செயலை அரசனுக்குச் சொல்லிக்காட்டுவதாக அமைந்துள்ளது.

அரசனின் தந்தைக்குத் தந்தை போரிட்டபோது, இவன் தந்தை அரசனுக்கு முன்னே நின்று பகைவரின் படைகள் தாக்காவண்ணம் பாதுகாத்தானாம். மழைத்துளி விழாமல் தடுக்கும் ஓலைக்குடை போல் இந்த அரசனின் பாட்டனுக்கு விளங்கினானாம்.

அடிக்குறிப்பு[தொகு]

  1. தொல்காப்பியம் புறத்திணையியல் 17
  2. புறநானூறு பழைய உரை, உ.வே.சாமிநாதையர் பதிப்பு
  3. மண் திணி ஞாலத்துத் தொன்மையும் மறனும்
    கொண்டு பிறர் அறியும் குடிவரவு உரைத்தன்று

    புறப்பொருள் வெண்பாமாலை 35
"https://ta.wikipedia.org/w/index.php?title=குடிநிலை_உரைத்தல்&oldid=1206611" இருந்து மீள்விக்கப்பட்டது