குடிசை (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குடிசை
இயக்கம்ஜெயபாரதி
தயாரிப்புஜுவாலா
கதைது. ராமமூர்த்தி
இசைஜி. காமேஷ்
நடிப்புதண்டாயுதபாணி
ராஜீ
ஒளிப்பதிவுராஜசேகர்
ராபர்ட்[1]
வெளியீடுமார்ச்சு 30, 1979
நீளம்3326 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

குடிசை 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜெயபாரதி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் தண்டாயுதபாணி, ராஜீ மற்றும் பலரும் நடித்துள்ளனர். டெல்லி கணேஷ், கமலா காமேஷ் ஆகியோர் இப்படத்தின் மூலமாக அறிமுகமாயினர். இப்படத்தின் கதை இதழில் ஜெயபாரதியின் தந்தையும் எழுதாதாளருமான து. ராமமூர்த்தி எழுதி கணையாழி இதழில் வெளிவந்த குடிசை என்ற புதினத்தின் கதையை அடிப்படையாகக் கொண்டது. இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. தென்னிந்தியாவின் எல்லாத் திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டது. தமிழில் வெளியான கடைசி கறுப்பு வெள்ளைத் திரைப்படம் இதுவே.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. செல்லப்பா (13 செப்டம்பர் 2019). "அவர் ஒரு பொன்மாலைப் பொழுது". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 13 செப்டம்பர் 2019. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  2. வெ. சந்திரமோகன் (4 ஆகத்து 2017). "'21 ரூபாயுடன் படத்தைத் தொடங்கினேன்' - இயக்குநர் ஜெயபாரதி நேர்காணல்". செவ்வி. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 4 ஆகத்து 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குடிசை_(திரைப்படம்)&oldid=3690971" இலிருந்து மீள்விக்கப்பட்டது