குடிசெட்லு பிரசன்ன திம்மராய சுவாமி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு பிரசன்ன திம்மராய சுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கிருஷ்ணகிரி
அமைவிடம்:குடிசெட்லு, பாகலூர்
சட்டமன்றத் தொகுதி:ஒசூர்
மக்களவைத் தொகுதி:கிருஷ்ணகிரி
கோயில் தகவல்
மூலவர்:பிரசன்ன திம்மராய சுவாமி
தாயார்:ஸ்ரீதேவி, பூதேவி
குளம்:புஷ்கரணி தீர்த்தம்
சிறப்புத் திருவிழாக்கள்:4 ம் சனி
வரலாறு
கட்டிய நாள்:16 ஆம் நூற்றாண்டு
அமைத்தவர்:பாலேகார்

குடிசெட்லு பிரசன்ன திம்மராய சுவாமி கோயில் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம், குடிசெட்லு என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.

வரலாறு[தொகு]

இக்கோயில் பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்தத பாலேகார் என்ற மன்னரால் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது.

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலின் முன்புறம் புஷ்கரணி தீர்த்தம் என்ற திருக்குளம் உள்ளது. கோயிலின் முகப்பில் ஐந்துநிலை இராசகோபுரம் உள்ளது. இராசகோபுரத்தின் எதிரில் வீர ஆஞ்சனேயர் சந்நிதி அமைந்துள்ளது. கருட கம்பத்தையும், துவஜஸ்தம்பத்தையும் கடந்து உள்ளே சென்றால், கருவறையில் நின்ற கோலத்தில் திம்மராயர் திருமகள், மண்மகளுடன் உள்ளார். இவருக்கு நேரெதிரில் கருடாழ்வார் சேவை சாதித்தபடி உள்ளார். கருவறையின் இடதுபுறம் தும்பிக்கை ஆழ்வார் எனப்படும் பிள்ளையாரின் சந்நிதி உள்ளது. பக்தர்கள் அமைதியாக தியானிக்க இங்கு தியான மண்டபம் உள்ளது.

விழாக்கள்[தொகு]

இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி மாதம் பௌர்ணமியன்று திருவிழா நடத்தப்படுகிறது. பௌர்ணமிக்கு முன்பின் என மொத்தம் ஒன்பது நாட்கள் விழா நடக்கிறது. அப்போது திருமண உற்சவம், கருடசேவை, தேர்த் திருவிழா பல்லக்கு உற்சவம் போன்றவை நடத்தப்படுகின்றன.[1]

அமைவிடம்[தொகு]

ஒசூரில் இருந்து பாகலூர் சென்று அங்கிருந்து பேரிகை செல்லும் வழியில் குடிசெட்லு என்ற சிற்றூரில் இக்கோயில் அமைந்துள்ளது. இது ஒசூரில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "ஓசூர் அருகே திம்மராய சுவாமி கோயில் தேரோட்டம்". செய்தி. தினகரன். 6 பெப்ரவரி 2018. Archived from the original on 2018-02-07. பார்க்கப்பட்ட நாள் 8 சூலை 2018. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. திருக்கோயில்கள் வழிகாட்டி கிருஷ்ணகிரி மாவட்டம். தர்மபுரி: தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை. 2014 ஆகத்து. பக். 109-111.