குடல்வால் புற்று
குடல்வால் புற்றுநோய் Appendix cancer | |
---|---|
ஒத்தசொற்கள் | Appendiceal cancer |
சிறப்பு | புற்றுநோயியல், பொது அறுவை சிகிச்சை |
அறிகுறிகள் | வீக்கம், வலது அடிவயிற்றில் அசௌகரியம், மூச்சுத் திணறல், பசியின்மை[1] |
வழமையான தொடக்கம் | ~50-55 அகவை[2] |
வகைகள் | பெருங்குடல் வகை அடினோகார்சினோமா, புற்றுநோயற்ற குடல்வால் கட்டிகள், சிக்னெட்-வளைய உயிரணு அடினோகார்சினோமா[3] |
சூழிடர் காரணிகள் | புகைத்தல், குடும்ப வரலாறு, பல அகஞ்சுரப்பு நியோபிளாசியா வகை 1[4] |
நோயறிதல் | உயிரகச்செதுக்கு, வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி, காந்த அதிர்வு அலை வரைவு[5] |
ஒத்த நிலைமைகள் | இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய், குடற் பதற்றப் பிணிக்கூட்டு, முலைப்பால் வெல்லம் தாளாமை, இரைப்பைப் புற்றுநோய்[6] |
சிகிச்சை | குடல்வாலெடுப்பு, வேதிச்சிகிச்சை, கதிர் மருத்துவம்[7] |
முன்கணிப்பு | ஐந்தாண்டு உயிர்வாழும் வீதம் 25-88% (அமெரிக்கா)[8] |
நிகழும் வீதம் | ~1,000/ஆண்டு (அமெரிக்கா)[9] |
இறப்புகள் | அறியப்படவில்லை |
குடல்வால் புற்றுநோய் (appendix cancer) என்பது குடல்வாலில் மிகவும் அரிதாகத் தோன்றும் ஒரு புற்றுநோய் ஆகும். குடல்வாலில் உள்ள உயிரணுக்கள் கட்டுப்பாடற்று பலகிப்பெருகுவதனால் இது தோன்றும்
குடல்வால் பை போன்ற ஓர் உறுப்பாகும். இது பொதுவாக 10 சென்டிமீட்டர் நீளமிருக்கும். இவ்வுறுப்பு செரிமான மண்டல உறுப்பாகவே கருதப்படுகிறது. மேலும் இது தேவையற்ற ஓர் உறுப்பாகவும் கருதப்படுகிறது. நாளமில்லாச் சுரப்பி, நாளமுடையச் சுரப்பி, மற்றும் ஊநீர் தொகுதியினைச் சார்ந்ததாகவும் எண்ணப்படுகிறது. குடல்வால் புற்று கார்சினாய்ட் வகையைச் சார்ந்தது.[10] மிகவும் மெதுவாக வளரும் கட்டியாகும். இது புற்றாக இருக்க வேண்டுவதில்லை. நுண்ணோக்கியில் ஆராயும் போது அவை குடல்புற்று போல் காணப்படுகின்றது. 1,000,000 பேரில் 0.12 பேரே இந்நோயுடன் காணப்பட்டனர். ஆரம்ப நிலையில் அறுவை மருத்துவமும் தொடந்து கதிர்மருத்துவமும் மேற்கொள்ளப்படுகின்றன.
இரைப்பை குடல் இணைப்புக் கட்டிகள் வீரியம் மிக்க ஆற்றலுடன் கூடிய அரிய கட்டிகள் ஆகும். முதன்மை நிணநீர்ப்புற்றுநோய்கள் குடல்வாலில் ஏற்படலாம். மார்பகப் புற்றுநோய், பெருங்குடல் மலகுடலுக்குரிய புற்று நோய், மற்றும் பெண் பிறப்புறுப்புக் கட்டிகள் குடல்வாலுக்கு மாற்றியமைக்கப்படலாம்.[11]
மருத்துவம்
[தொகு]குடல்வால் புற்று பிற இடங்களுக்குப் பரவலாம். 20% சளிப்படல அணுக்களில் தோன்றுகிறது. வயது ஒரு முக்கிய காரணியாக உள்ளது. மற்றபடி காரணம் இன்னது என்று தெரியவில்லை. அறிகுறிகளாக வயிற்று வலி, வயிறு உப்புசம், குடல்வால் அழர்ச்சி, வயிற்றுப்பகுதியில் நீர் கோர்த்திருத்தல், மலம் கழிப்பதில் கடினம், மலட்டுத் தன்மை முதலியன காணப்படும். கணினியுடன் இயங்கும் தளகதிர் படம், காந்த ஒத்ததிர்வு படம், மீயொலி ஆய்வு இந்நோயினைக் கண்டு கொள்ள உதவும். திசுப் பரிசோதனை நோயினை உறுதி செய்யக் கட்டாயம் செய்ய வேண்டும். அறுவையே சிறந்த மருத்துவ முறையாக உள்ளது. வேதி மருந்துகளும் உள்ளன. சில சமயங்களில் கதிர்மருத்துவமும் மேற்கொள்ளப்படுகிறது. பாசுபரசு 32 ம் உதவக்கூடும்.[12]
பாதிக்கப்பட்ட குறிப்பிடத்தக்கவர்கள்
[தொகு]நடிகை ஆட்ரி ஹெப்பர்ன் குடல்வால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 1993 இல் இறந்தார்.[13] ஈஎஸ்பிஎன் விளையாட்டு வர்ணனையாளர் இசுட்டுவர்ட் இசுக்கொட் 2007 இல் இவ்வகைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 2015 இல் இறந்தார்.[14][15]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ MedStar Georgetown Cancer Institute
- ↑ Rare Diseases article
- ↑ MedStar Georgetown Cancer Institute
- ↑ Moffitt Cancer Center
- ↑ MedStar Georgetown Cancer Institute
- ↑ MedStar Georgetown Cancer Institute
- ↑ University of Chicago Medicine
- ↑ cancer.net
- ↑ MD Anderson
- ↑ Griniatsos, J; Michail, O (2010). "Appendiceal neuroendocrine tumors: recent insights and clinical implications.". World Journal of Gastrointestinal Oncology 2 (4): 192–196. doi:10.4251/wjgo.v2.i4.192. பப்மெட்:21160597.
- ↑ Rosai, Juan (2004) [1953]. "11. Gastrointestinal tract". Rosai and Ackerman's surgical pathology (9th ed.). Mosby. pp. 761–769.
- ↑ M. Townsend, Courtney (2012) [1969]. "51. The appendix". Sabiston (18th ed.). Elsevier. p. 1289.
- ↑ Selim, Jocelyn (Fall 2009), "The Fairest of All", CR, Philadelphia: American Association for Cancer Research, vol. 4, no. 4, archived from the original on April 19, 2010, பார்க்கப்பட்ட நாள் January 22, 2011
- ↑ "Stuart Scott Says, 'F U, Cancer!'". Men's Health. http://www.menshealth.com/health/stuart-scott-cancer?fullpage=true. பார்த்த நாள்: 7 January 2015.
- ↑ "Stuart Scott, ESPN’s Voice of Exuberance, Dies at 49". New York Times. https://www.nytimes.com/2015/01/05/sports/stuart-scott-espn-sportscaster-is-dead-at-49.html?_r=0. பார்த்த நாள்: 7 January 2015.
வெளி இணைப்புகள்
[தொகு]வகைப்பாடு |
---|