குடமுழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குடமுழா (ஐம்முக முழவம்)

குடமுழா என்பது ஒரு பஞ்சமுக வாத்தியமாகும்.

வரலாறு[தொகு]

முப்பது வகையான தோற்கருவிகள் தமிழர் வாழ்வோடு இணைந்திருந்தன. அவற்றில் குடமுழவம் எனப்படும் குடமுழா மங்கலக் கருவியாகும். சங்க நூல் மட்டுமல்லாமல் அண்மையில் வெளியான நூல்களிலும்கூட குடமுழவம் பற்றிய குறிப்புகள் உள்ளன. [1]

இசைக்கருவி, தாளக்கருவி[தொகு]

தொன்மையில் தமிழர்களின் இல்லங்களில் நிகழ்ந்த மங்கல நிகழ்ச்சிகளில் குடமுழா இருந்தது என்பதற்கும், இது யாழொடும், குழலொடும் இணைந்து ஒலித்தது என்பதற்கும் குறிப்புகள் உள்ளன. மங்கலக்கருவியாக இருந்த இது பின்னர் ஆடலுக்குரிய தாளக்கருவியாக ஆனது.[1]

வளர்ச்சி[தொகு]

இந்தியாவின் பல்வேறு கலை மரபுகளிலும் ஒரு வாயுடைய குடமுழவம் இடம் பெற்றிருந்தாலும், தமிழகத்தில் குறிப்பாகச் சோழ மண்டலத்தில் இக்கருவி பஞ்சமுக முழவமாக வளர்ச்சியடைந்தது. இன்றும் இம்மண்டலத்தின் ஏதோ ஒரு மூலையில் (திருவாரூரில்) இசைக்கப்பெற்று வாழ்ந்துகொண்டும் இருக்கிறது.[1]

மேலும் பார்க்க[தொகு]

இவையையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 குடவாயில் பாலசுப்ரமணியன், குடமுழா, அஞ்சனா பதிப்பகம், 6, நிர்மலா நகர், தஞ்சாவூர் 613 007, 1997

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குடமுழா&oldid=2031509" இருந்து மீள்விக்கப்பட்டது