உள்ளடக்கத்துக்குச் செல்

குடமாளூர் கருணாகரன் நாயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குடமாளூர் கருணாகரன் நாயர் (1916-2000) என்பவர் ஒரு முன்னோடி கதகளி நடனக்கலைஞர் ஆவார், தென்னிந்தியாவில் கேரளாவில் ஆடப்படும் பாரம்பரிய நடன நாடகமான கதகளியில் பெண் கதாபாத்திரங்களையும் (குடமலையூர் பிரபுத்துவ தமயந்தி, ருக்மணி, திரௌபதி மற்றும் தேவயானி, மோகினி மற்றும் லலிதா போன்ற மந்திரவாதிகள், கட்டாலட்டி அல்லது காட்டுவாசி மனைவி, வண்ணாட்டி அல்லது சலவைப் பெண், மற்றும் மலயாட்டி அல்லது மலைப்பெண், மற்றும் சிருங்காரம் அல்லது சிற்றின்பம் மற்றும் கருணா) அப்பெண்களின் சோகமான அம்சங்களையும் அதில் முன்னிலைப்படுத்திய கலைஞராவார்.[1]

புகழ்பெற்ற கலாமண்டலம் கிருஷ்ணன் நாயருடன் இணைந்து, கருணாகரன் நாயரின் படைத்த பல நடனக்கலைப் பங்களிப்புகள் கதகளியின்பல்வேறு பரிமாணங்களைக் காட்டியுள்ளது. அவரது வசீகரமான முகத்துடனும், மேடையில் அழகான பெண்மையின் அசைவுகளுடனும், குடமாளூர் கருணாகரன் , கிருஷ்ணன் நாயரின் கதாநாயகர்களுக்கு எதிரே சிறந்த கதாநாயகி என்று பெயர் பெற்றுள்ளார்.

தமயந்தி, லலிதா, குந்தி, மோகினி, ருக்மணி, தேவயானி, சைரந்திரி மற்றும் திரௌபதி போன்ற கதகளியின் முக்கிய பெண் கதாபாத்திரங்கள் வேடமேற்று இவர், கிருஷ்ணன் நாயரின் நளன், கர்ணன், ருக்மாங்கதன் மற்றும் கீச்சகன் போன்ற கதாநாயகர்களோடு நிகழ்ச்சிகளில் பங்கேற்ப்பது வழக்கம்மாகும்.

1916 ஆம் ஆண்டில் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள குடமாளூர் கிராமத்தில் வாசுதேவபுரம் கோயிலுக்கு அருகில் பிறந்த கருணாகரன் நாயர், அவரது குருவான குறிச்சி ராம பணிக்கரால் கதகளி தீட்சை பெற்றுள்ளார்.[2] பின்னர், குறிச்சி குஞ்சன் பணிக்கர், தோட்டம் சங்கரன் நம்பூதிரி மற்றும் கொச்சப்பி-ராமன் சகோதரர்களிடம் பயிற்சி பெற்றுள்ள இவர் மறைந்த காவலப்பாரா நாராயணன் நாயரிடம் இருந்து கதகளி வடக்குப் பள்ளியில் பயின்று புகழ் பெற்றுள்ளார். குசேலவருத்தம் என்ற ஆட்டத்தில் குசேலன் (சுதாமா) மற்றும் பாலிவிஜயத்தில் நாரதன் போன்ற ஆண் வேடங்களிலும் நடித்துள்ளார்,

சிறு வயதிலேயே தோட்டம் சங்கரன் நம்பூதிரியுடன் 1881-1943 காலகட்டத்தில் அவரது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில்அவருடன் சென்ற இவர் காவலபர நாராயணன் நாயரின் சீடராகி, வடக்கு கதகளி பாணியில் பட்டம் பெற்றுள்ளார். 1939 ஆம் ஆண்டில் திருவிதாங்கூர் அரண்மனையின் கதகளியாட்டத்தின் முக்கிய குழுவில் சேர்ந்துள்ள கருணாகரன், கொச்சியில் உள்ள பேக்ட் கதகளி பள்ளியிலும், பின்னர் தனது சொந்த ஊரான குடமாளூர் கலா கேந்திரத்திலும் கதகளி நடன ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். கருணாகரன் நாயர் கோட்டக்கல் சிவராமனின் குரு ஆவார், கதகளியில் பெண் வேடங்களின் முக்கியத்துவத்தை பிரபலப்படுத்தியதில் இவருக்கு சிறந்த இடமுண்டு.

மத்திய சங்கீத நாடக அகாடமி மற்றும் கேரள சங்கீத நாடக அகாடமியின் விருதுகளை வென்றுள்ள கருணாகரன் அக்டோபர் 17, 2000 அன்று மறைந்தார்.

குடமாளூர் கருணாகரன் நாயரின் பாரம்பரியத்தை அவரது சீடர் மேரிஸ் நொய்சக்ஸ், அவரது மருமகன் மாதூர் கோவிந்தன் குட்டி மற்றும் பேரன் குடமாளூர் முரளிகிருஷ்ணன் ஆகியோர் தொடர்ந்து வருகின்றனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Kathakali Vijnankosam (Kathakali Encyclopedia, page 314)
  2. "Kudamaloor Karunakaran Nair Explained". everything.explained.today. பார்க்கப்பட்ட நாள் 2024-02-16.