குடகு இரவு தவளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குடகு இரவு தவளை
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
நைக்டிபேட்ராச்சிடே
பேரினம்:
நைக்டிபேட்ராச்சசு
இனம்:
நை. சாங்டிபாலுசிரிசு
இருசொற் பெயரீடு
நைக்டிபேட்ராச்சசு சாங்டிபாலுசிரிசு
ராவ், 1920

நைக்டிபேட்ராச்சசு சாங்டிபாலுசிரிசு (Nyctibatrachus sanctipalustris) என்பது குடகு இரவு தவளை (Coorg night frog) அல்லது புனித சதுப்புநில சுருக்கத் தவளை ஆகும். இது இந்தியாவில் உள்ள தவளைக் குடும்பத்தில் நைக்டிபேட்ராச்சிடே குடும்பத்தினைச் சார்ந்தது. இதனுடைய சிற்றினப் பெயரானது, இலத்தீன் மொழியில் "பரிசுத்த சதுப்புநிலத்தினை” குறிக்கிறது. இது காவிரியின் (ஆறு) புனிதப் பகுதியான குடகில் காணப்படுகிறது.[2]

பரவலும் வாழிடமும்[தொகு]

நைக்டிபேட்ராச்சசு சாங்டிபாலுசிரிசு இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலையில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரியாகும். அனைத்து தவளைகளும் கர்நாடக மாநிலத்திற்குள் மட்டுமே சேகரிக்கப்பட்டுள்ளது.[2] ஈரமான வெப்பமண்டல காடுகளுக்குள் சதுப்புநிலங்களில் பகுதி நீர் வாழ் உயிரினம் இது.[1]

மறு கண்டுபிடிப்பு[தொகு]

இந்த இனத்தை சி.ஆர்.நாராயண் ராவ் 1920இல் விவரித்தார். சுமார் 91 ஆண்டுகளாகப் பார்வையில் படாமல் இருந்த இந்த இனம் அழிந்துவிட்டதாகக் கருதப்பட்டது. ஆனால் 2011ஆம் ஆண்டில் நைக்டிபேட்ராச்சசு பூச்சா மற்றும் நைக்டிபேட்ராச்சசு பேரினத்தினைச் சேர்ந்த பிறத் தவளைகளையும் ஹெர்படாலஜி வல்லுநர் சத்தியபாம தாசு பிசுவால் கண்டுபிடித்தார்.[3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 S.D. Biju, Sushil Dutta, Robert Inger (2004). "Nyctibatrachus sanctipalustris". IUCN Red List of Threatened Species 2004: e.T58403A11773851. doi:10.2305/IUCN.UK.2004.RLTS.T58403A11773851.en. https://www.iucnredlist.org/species/58403/11773851. பார்த்த நாள்: 16 November 2021. 
  2. 2.0 2.1 Frost, Darrel R. (2013). "Nyctibatrachus sanctipalustris Rao, 1920". Amphibian Species of the World 5.6, an Online Reference. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 24 November 2013.
  3. The Associated Press (2011-09-17). "Scientists Discover 12 New Frog Species In India". NPR. பார்க்கப்பட்ட நாள் 2011-09-18.
  4. "12 night frog varieties found in the Western Ghats". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2011-09-17. Archived from the original on 2012-09-27. பார்க்கப்பட்ட நாள் 2011-09-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குடகு_இரவு_தவளை&oldid=3742293" இலிருந்து மீள்விக்கப்பட்டது