உள்ளடக்கத்துக்குச் செல்

குஞ்சராணி தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தனிநபர் தகவல்
முழு பெயர்நேமிரக்பம் குஞ்சராணி தேவி
சுட்டுப் பெயர்(கள்)நேமிரக்பம் ஜாணி தேவி
தேசியம் இந்தியா
பிறப்பு1 மார்ச்சு 1966 (1966-03-01) (அகவை 59)
இம்பால், மணிப்பூர், இந்தியா
உயரம்148 செ.மீ
எடை48 kg (106 lb)
விளையாட்டு
நாடு India
விளையாட்டுபாரம் தூக்குதல்
Weight class48 கிலோ
அணிதேசிய அணி
பதக்கத் தகவல்கள்
நாடு  இந்தியா |- bgcolor=#cccccc align=center உலக வாகையாளர் போட்டி
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1989 மான்செஸ்ட்டர் 44 kg
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1991 டோனௌசிங்கென் 44 kg
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1992 வர்னா 44 kg
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1994 இஸ்தான்புல் 46 kg
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1995 வர்சாவ் 46 kg
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1996 குவான்சூ 46 kg
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1997 சியாங் மை 46 kg |- bgcolor=#cccccc align=center ஆசியப் போட்டிகள்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 1990 பெய்ஜிங் 44 kg
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 1994 ஹிரோஷிமா 46 kg
பொதுநலவாய நாடுகளின் போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2006 மன்செஸ்ட்டர் 48 kg
தங்கப் பதக்கம் – முதலிடம் 2006 மெர்பேர்ன் 48 kg

நேமிரக்பம் குஞ்சராணி தேவி (Nameirakpam Kunjarani Devi) (பிறப்பு 1 மார்ச் 1966)இந்தியாவைச் சேர்ந்த பாரம் தூக்கும் வீராங்கனை ஆவார். பாரம் தூக்குதலில் மிகவும் புகழ்பெற்ற இந்திய விளையாட்டு வீரர்களில் இவரும் ஒருவர்.

பின்னணி

[தொகு]

தேவி 1968 மார்ச் 1 அன்று மணிப்பூரின் தலைநகர் இம்பாலில்உள்ள கைராங் மாயை லீகை எனுமிடத்தில் ஓர் இந்து மெய்தேய் குடும்பத்தில் பிறந்தார். 1978 ஆம் ஆண்டில் இம்பாலின் சிந்தம் சின்ஷாங் உறைவிட உயர்நிலைப் பள்ளியில் படித்தபோது விளையாட்டுகளில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். இம்பாலில் உள்ள மகாராஜா போதா சந்திர கல்லூரியில் படிக்கும்போது, பாரம் தூக்குதல் இவரது முதல் தேர்வாக மாறியது.

மத்திய சேமக் காவல் படையில் பணியில் சேர்ந்தார். பின்னர், அங்கு காவல்படையின் பளுதூக்குவர்களின் அணித்தலைவராக 1996 முதல் 1998 வரை இருந்தார்.

விளையாட்டு வரலாறு

[தொகு]

1985 ஆம் ஆண்டு தொடங்கி, தேசிய பாரம்தூக்குதல் போட்டியில் 44, 46, 48 கிலோகிராம் எடைப்பிரிவுகளில் பதக்கங்களை வெல்லத் தொடங்கினார். 1987 ஆம் ஆண்டில் திருவனந்தபுரத்தில் நடந்த போட்டிகளில் இரண்டு புதிய தேசிய சாதனைகளை படைத்தார். தனது எடை வகையை 46 கிலோவாக மாற்றி 1994 ஆம் ஆண்டில்புனேவில் ஒரு தங்கத்தை வென்றார். ஆனால் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மணிப்பூரில் 48 கிலோ பிரிவில் போட்டியிட முயன்றபோது வெள்ப் பதக்கமே இவருக்குக் கிடைத்தது

1990 இல் பெய்ஜிங், 1994 இல் ஹிரோஷிமா நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்றார். மேலும் 1998 ஆம் ஆண்டு பேங்காக்கில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் எந்தப் பதக்கத்தையும் பெறவில்லை.

அங்கீகாரம்

[தொகு]

1990 ஆம் ஆண்டில் அருச்சுனா விருதைப் பெற்ற குஞ்சராணி, கேல் ரத்னா விருதை லியாண்டர் பயஸுடன் பகிர்ந்து கொண்டார். அதே ஆண்டில் கே. கே. பிர்லா விளையாட்டு விருதையும் வென்றார். இந்திய அரசு இவருக்கு 2011 ஆம் ஆண்டில் பத்மசிறீ கௌரவத்தை வழங்கியது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 October 2015. Retrieved 21 July 2015.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=குஞ்சராணி_தேவி&oldid=4464721" இலிருந்து மீள்விக்கப்பட்டது