குஞ்சன் நாடார்
குஞ்சன் நாடார் (Kunjan Nadar) கன்னியாகுமரி மாவட்டம் தமிழ் நாட்டுடன் இணைய குமரி மாவட்ட மக்கள் நடத்திய தெற்கு எல்லைப் போராட்டத்தில் தீவிரமாக செயல்பட்டவர். இவர் ஒரு வழக்கறிஞர். இவர் நெய்யாற்றின்கரை தாலுகா திரிபுரம் என்ற ஊரில் 1911 ம் ஆண்டு பிறந்தார். இவர் தென்குரல் என்ற பத்திரிக்கையை நிறுவினார்.
பொதுவாழ்க்கை[தொகு]
- 1952ம் ஆண்டு பாறசாலை சட்டமன்ற தொகுதியிலிருந்து சுயேட்சையாக வெற்றி பெற்றார்[1]
- 1954ம் ஆண்டில் நடைபெற்ற இடைத்தேர்தலில் தி.தா.நா. காங்கிரசு சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அக்கட்சியின் கட்சிச் செயலாளராகவும் பணியாற்றினார்..[2]
- 1954ம் ஆண்டில் நேசமணி சிறையில் இருக்கும் போது மார்த்தாண்டம், மற்றும் புதுக்கடையில் திருவிதாங்கூர் அரசுக்கு எதிராக ஊர்வலம் நடத்தினார். அதில் பட்டம் தாணுபிள்ளை அரசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் மரணமடைந்தனர். இதை தலைமை தாங்கியதற்காக இவருக்கு 8 மாத காலம் சிறைதண்டனை அளிக்கப்பட்டது.
- 1962 ம் ஆண்டில் சென்னை சட்டசபைக்கு பத்மநாபபுரம் தொகுதியிலிருந்து சுயேட்சையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]
கருத்துகள்[தொகு]
- பழவங்காடி மைதானத்தில் முதல் மந்திரி பட்டம் தாணுபிள்ளை பேசிய பேச்சு பற்றி, குஞ்சன் நாடார் கூறியது
ஒரு முதல்வர் மலையாளிகளைத் தமிழர்கள் மீது ஏவி விடும் போக்கில் பழவங்காடியில் பேசியிருப்பது வருந்தத்தக்கது. இப்போது ஒன்றை நான் கூறியாக வேண்டியுள்ளது. தென்திருவிதாங்கூரில் உள்ள மலையாளிகள் யாராவது ஒருவர் தமிழர்களால் துன்பப் படுத்தப்பட்டிருப்பரா?. அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தை பட்டம் சுட்டிக் காட்ட முடியுமா?. அவருடைய எண்ணத்திற்கு மாறாக தமிழர்களும், மலையாளிகளும் சகோதரர்களாக நிம்மதியாக இருக்கின்றனர். தமிழர்களின் கோரிக்கையில் நியாயம் உள்ளது என்று இன்று மலையாள சகோதரர்கள் கூறுவதை பட்டம் இதுவரை கேட்காதிருந்தால் இனியாவது கேட்டு உள்ள நிலைமையை தெரிந்து கொள்வார் என்று நம்புகின்றேன். (ஆகத்து 8, 1954 தினமலர் செய்தி)
- குஞ்சன் நாடார் சிறையிலிருந்து வெளியிட்ட அறிக்கை, நாஞ்சில் நாட்டை கேரளத்துடன் இணைத்தே வைக்க சதி நடக்கிறது. உடனடியாக மக்கள் விழித்தெழ வேண்டும். இது மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது.
இவர் ஆகத்து 19, 1974ல் காலமானார்