குஜிஸ்தா அக்தர் பானு
குஜிஸ்தா அக்தர் பானு | |
---|---|
![]() | |
பிறப்பு | 11 அக்தொபர் 1872 [1] மின்த்தாபூர், வங்காளம், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 12 சனவரி 1912 கல்கத்தா, வங்காளம், பிரித்தானிய இந்தியா | (அகவை 39)
தந்தை | உபைதுல்லா அல் உபைதி சுஹ்ரவர்தி |
வாழ்க்கைத் துணை | ஜாஹித் சுஹ்ரவர்தி |
பிள்ளைகள் | உசைன் சாகித் சுராவர்தி, ஹசன் ஷாஹீத் சுஹ்ரவர்தி |
குஜிஸ்தா அக்தர் பானு சுஹ்ரவர்தியா (Khujista Akhtar Banu) சுஹ்ரவர்தி பேகம் எனப் பரவலாக அறியப்படும் இவர், 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்த எழுத்தாளரும், வங்காள சமூக ஆர்வலரும், கல்வியாளர், சமூக சீர்திருத்தவாதி ஆவார். 1887 ஆம் ஆண்டில் மேல்நிலை கேம்பிரிட்ஜ் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற முதல் இந்தியப் பெண், [2] கொல்கத்தா பல்கலைக்கழகத்தால் தேர்வாளராக நியமிக்கப்பட்ட முதல் இந்தியப் பெண்மணி ஆகிய சிறப்புகளைப் பெற்றவராவார். இவர் வங்காளத்தின் முன்னாள் பிரதமரான உசைன் ஷாஹீத் சுஹ்ரவர்தியின் தாயார் ஆவார்.[3]
ஆரம்பக்கால வாழ்க்கை மற்றும் கல்வி
[தொகு]குஜிஸ்தா அக்தர் 1872 ஆம் ஆண்டில் வங்காளத்தின் புகழ்பெற்ற சுஹ்ரவர்தி குடும்பத்தில் உபைதுல்லா அல் உபைதி சுஹ்ரவர்தி மற்றும் அவரது மனைவி மக்புல்லன் நிசா பேகம் ஆகியோரின் மூத்த மகளாகப் பிறந்தார். இவர் ஷிஹாப் அல்-தின் உமர் அல்-சுஹ்ரவர்டி மற்றும் பஹாவுதீன் ஜகாரியா சுஹ்ரவர்தியின் நேரடி வழித்தோன்றலாக இருந்தார். குஜிஸ்தாவின் தாத்தா ஷா அமினுதீன் சுஹ்ரவர்தி வங்காளத்தில் சுஹ்ரவர்தியா வரிசையின் கடைசி சூஃபி பீர் என்று கருதப்படுகிறார். இவரது சகோதரர்களில் அப்துல்லா அல்-மமுன் சுஹ்ரவர்தி, ஹசன் சுஹ்ரவர்தி ஆகியோர் அடங்குவர்.[4]
அக்காலத்தில் பெண்களுக்கான பள்ளிகள் இல்லாத காரணத்தினால், இவரது குடும்பத்தின் பல பெண் முன்னோடிகளைப் போலவே, இவரும் தனது இளமைக் காலத்தில் வீட்டிலேயே கல்வி பயின்றார். இவர் தனது தந்தையிடமிருந்து பாரசீகம், அரபு, ஆங்கிலம் மற்றும் உருது மொழிகளைக் கற்றுக்கொண்டார். பின்னர் இவர் 1887 ஆம் ஆண்டில் இந்தியத் தேர்வு வாரியத்திலிருந்து கணிதத்திலும் பாரசீக இலக்கியத்திலும் கௌரவப்பட்டம் பெற்றார்.[4] தனது மேல்நிலை கேம்பிரிட்ஜ் படிப்பை முடித்த பிறகு, கல்கத்தா பல்கலைக்கழகத்தால் உருது இலக்கியத்திற்கான தேர்வாளராக நியமிக்கப்பட்டார். அந்நேரத்தில் இந்த கவுரவத்தைப் பெற்ற ஒரே இந்தியப் பெண் இவரே.[2]
தொழில் வாழ்க்கை
[தொகு]இந்திய மக்களைக் கல்வி கற்கவும், மேம்படுத்தவும் குஜிஸ்தா உறுதியாக இருந்தார். அதன் பொருட்டு இவர் சமூகப் பணியாற்றினார். ஓர் எழுத்தாளராக, இவர் புகழ்பெற்ற புத்தகமான "ஆயினா இ இப்ராத்" என்ற நூலினை எழுதினார்.அது, கல்கத்தா பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டு அதன் அனைத்து உறுப்புக் கல்லூரிகளின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டது.[5][6]
குஜிஸ்தா ஒரு பெண்கள் உரிமை ஆர்வலராக உருவெடுத்தார். இவர் பெண் கல்வியின் தீவிர ஆதரவாளராக இருந்தார்.[7] 1909 ஆம் ஆண்டில், கல்கத்தாவில் சுஹ்ரவர்தியா பெண்கள் பள்ளியை நிறுவினார். இந்தப் பள்ளியை இந்தியாவின் முன்னாள் வைஸ்ராய் கில்பர்ட் எலியட்-முர்ரே-கினின்மவுண்டின் (மிண்டோவின் முதலாவது ஏர்ல் ஆவார் மற்றும் லார்ட் மிண்டோ என்று பரவலாக அறியப்பட்டவர்) மனைவி லேடி மிண்டோ அன்னா மரியா அமியந்த் திறந்து வைத்தார்.[2][8]
குஜிஸ்தா ஏழைகளிடம் அனுதாபம் கொண்டிருந்தார். எனவே, காலரா மற்றும் இன்ஃப்ளூயன்ஸா போன்ற தொற்றுநோய்கள் மிகுந்த அக்காலத்தில், சுத்தம் மற்றும் சுகாதாரம் குறித்துப் பின்தங்கிய மக்களுக்குக் கற்றுக்கொடுக்கச் சேரிகளுக்கு அடிக்கடி சென்று வந்தார்.[4]
திருமணம் மற்றும் குடும்பம்
[தொகு]குஜிஸ்தா தனது உறவினரான ஜாஹித் சுஹ்ரவர்தியை மணந்தார், அவர் கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றினார். இத்தம்பதிக்கு இரண்டு மகன்கள் பிறந்தனர்.
- உசைன் சகீத் சுராவர்தி, ஒரு வழக்கறிஞர், அரசியல்வாதி, பின்னர் வங்காளத்தின் 3 வது பிரதமராகவும், பாகிஸ்தானின் 5 வது பிரதமராகவும் ஆவார்.[2]
- அசன் ஷாஹீத் சுஹ்ரவர்தி, ஒரு எழுத்தாளரும் மொழியியலாளரும் ஆவார்.[2]
இறப்பு
[தொகு]கல்கத்தாவின் சேரிகளுக்குச் சென்றபோது தொற்றிய இன்ஃப்ளூயன்ஸா பாதிப்பால், குஜிஸ்தா 1919 சனவரி 12 இல் இறந்தார்.[9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Burke, Sir Bernard, ed. (1939). Burke's Peerage, Baronetage & Knighthood (97th ed.). Burke's Peerage & Gentry. pp. 2921–2922.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 Khan, Waqar A. (2020-11-09). "The Unforgettable Suhrawardys of Bengal". The Daily Star (in ஆங்கிலம்). Retrieved 2021-10-23. பிழை காட்டு: Invalid
<ref>
tag; name ":0" defined multiple times with different content - ↑ "Individual : SUHRAWARDY - Search the Genealogy Library". Geneanet (in ஆங்கிலம்). Retrieved 2021-10-23.
- ↑ 4.0 4.1 4.2 Amin, Sonia Nishat (1996-01-01). Rise of Formal Education (in ஆங்கிலம்). Brill. ISBN 978-90-04-49140-3.
- ↑ "tipu sultan grandson". www.thedronemission.co.za. Archived from the original on 23 October 2021. Retrieved 2021-10-23.
- ↑ Amin, S. N. (1996). The World of Muslim Women in Colonial Bengal, 1876-1939 (in ஆங்கிலம்). BRILL. ISBN 978-90-04-10642-0.
- ↑ Niaz, Zakia Soman, Dr Noorjehan Safia (2020-07-29). Indian Muslim Women's Movement: For Gender Justice and Equal Citizenship (in ஆங்கிலம்). Notion Press. ISBN 978-1-64919-987-4.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ Amin, S. N. (1996). The World of Muslim Women in Colonial Bengal, 1876-1939 (in ஆங்கிலம்). BRILL. ISBN 978-90-04-10642-0.
- ↑ Amin, S. N. (1996). The World of Muslim Women in Colonial Bengal, 1876-1939 (in ஆங்கிலம்). BRILL. ISBN 978-90-04-10642-0.