குஜிலி இலக்கியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குஜிலி இலக்கியம் என்பது நாட்டார் மக்களால் செய்திகளை பாடலாக கூறிய வழமையாகும். [1] இந்த இலக்கிய முறை 19 ஆம் நூற்றாண்டின் பின்பகுதியிலிருந்து 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை மிகப் பரவலாக இருந்தது. இந்த குஜிலி இலக்கியத்தினை வலுவான செய்தி ஊடகமாக இலக்கியவாளர்கள் விவரிக்கின்றனர். இன்றைய புதுக்கவிதையைப் போன்றும் கானா பாடல்களைப் போன்றும் குஜிலி பாடல்களானது தனி பாணியில் அமைந்த இலக்கியமாகவே இருந்துள்ளது.[2]

தமிழ், மலையாளம் போன்ற மொழிகளில் குஜிலி பாடல்கள் பாடப்பட்டன. எந்தப் பொருள் புதிதாக அறிமுகமானாலும் அதைப் பற்றிப் பாட்டாக எழுதி இருக்கிறார்கள். இப்பாடல்களில் நடப்பு நிகழ்வுகள் குறித்து சுடச்சுட விரிவான விளக்கத்துடன், அதன் பின் நடந்தமை குறித்தும் பாடப்பட்டுள்ளது. இவைதவிற பாடலாசிரியர், காலம் போன்றவையும் இடம்பெற்றிருந்தன.

சொல்லிலக்கணம்[தொகு]

குஜிலி என்ற பெயர் குச்சிலி என்ற பெயரிலிருந்து திரிபாக வந்ததாகும். சென்னை பிராட்வே பகுதியில் குச்சிலிக் கடைத்தெரு எனுமிடத்தில் பாடல்களை பாடி நூல்களை வெளியிட்டு விற்பனை செய்து வந்தார்கள். குச்சிலி புத்தகங்கள் என்பது மருவி குஜிலி புத்தகங்கள் என வழங்கப்பட்டது.

காலம்[தொகு]

19ம் நூற்றாண்டு பின்பகுதியிலிருந்து 20ம் நூற்றாண்டு நடுப்பகுதி வரை.

குஜிலி நூல்கள்[தொகு]

  • மெட்ராஸ் ரயில் கலகம்
  • பஞ்சாப் படுகொலைச் சிந்து
  • இராவுத்தர் புகழ் அலங்காரச் சிந்து
  • சைதாப்பேட்டை ஆற்றில் பஸ் விழுந்த சிந்து
  • சென்னை வினோத சிங்காரப் பாட்டு
  • கள்ளப்புருசன் ஆசையால் பிள்ளையைக் கொன்ற கனகாம்பாள் துயரம்
  • அம்மாக்கண்ணு கொலைச் சிந்து, தென்னிந்திய தீவட்டி திருடன் பாட்டு
  • காசைக் கவரும் வேசி விலக்கு, கிண்டி ரேஸ் பாட்டு, அண்டாசீட்டுப் பாட்டு
  • வெள்ளசேதக் கும்மி, ஆதிதிராவிடன் பாட்டு, பாரதியார் பாட்டு பறிமுதல் சிந்து
  • சுயமரியாதைக் கும்மி, மகாத்மா காந்தி அரஸ்ட் பாட்டு
  • தென்னமரக் கும்மி
  • புறா பாட்டு
  • தேசமக்களை நாசப்படுத்தும் தேயிலைத் தோட்டப் பாட்டு
  • திருச்செந்தூர் இரயில்மார்க்க வழிநடைச் சிந்து[3]
  • இராஜ விசுவாசக் கும்மி
  • கிண்டிரேஸ் பாட்டு
  • சிலோன் கலகச் சிந்து
  • காந்திச் சிந்து
  • பகத்சிங் சிந்து
  • மாப்ளாக் கலவரச் சிந்து

நூல்கள்[தொகு]

  • முச்சந்தி இலக்கியம் - ஆ. இரா. வேங்கடாசலபதி

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.kalachuvadu.com/issue-60/page50.asp பரணிடப்பட்டது 2016-03-24 at the வந்தவழி இயந்திரம் காலத்தின் கண்ணாடி - இமயம்- காலச்சுவடு
  2. முகமது ஹுசைன் (4 ஆகத்து 2018). "குஜிலிப் பாட்டுத் தெரு". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 5 ஆகத்து 2018.
  3. http://andhimazhai.com/news/view/kujilippaattu-16-12-2013.html புதிய தொடர்- குஜிலிப்பாட்டு-1- இரா.சித்தானை

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குஜிலி_இலக்கியம்&oldid=3577026" இலிருந்து மீள்விக்கப்பட்டது