குஜராத் பால்கா கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பால்கா தீர்த்தம்
குஜராத் பால்கா கோயில் is located in Gujarat
குஜராத் பால்கா கோயில்
அமைவிடம் குஜராத் (around 3)
குஜராத் பால்கா கோயில் is located in இந்தியா
குஜராத் பால்கா கோயில்
குஜராத் பால்கா கோயில் (இந்தியா)
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:குஜராத்
மாவட்டம்:ஸ்ரீ சோம்நாத்
அமைவு:வேராவல்
ஆள்கூறுகள்:20°53′16.9″N 70°24′5.0″E / 20.888028°N 70.401389°E / 20.888028; 70.401389ஆள்கூறுகள்: 20°53′16.9″N 70°24′5.0″E / 20.888028°N 70.401389°E / 20.888028; 70.401389
கோயில் தகவல்கள்
வரலாறு
கோயில் அறக்கட்டளை:ஸ்ரீ சோம்நாத் அறக்கட்டளை, குஜராத்
இணையதளம்:somnath.org

பால்கா கோயில்(Bhalka) குஜராத்தின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ளது.

பின்னணி[தொகு]

மகாபாரதத்தின் கூற்றுப்படி, குருசேத்திர யுத்தம், காந்தாரியின் நூறு மகன்களின் மரணத்திற்கு காரணமாக அமைந்தது. துரியோதனனின் மரணத்திற்கு முந்தைய இரவு, கிருஷ்ணர் காந்தாரிக்கு தனது வருத்தத்தைத் தெரிவித்தார். கிருஷ்ணர் தெரிந்தே போருக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை என்று காந்தாரி உணர்ந்தார். மேலும், ஆத்திரத்துடனும், துக்கத்துடனும் காந்தாரி, கிருஷ்ணனும், அவரது யது வம்சத்தைச் சேர்ந்த மற்ற அனைவருமே 36 ஆண்டுகளுக்குப் பிறகு அழிந்து போவார்கள் என்று சபித்தார். 36 ஆண்டுகள் கடந்துவிட்ட பிறகு, ஒரு திருவிழாவில் யாதவர்களிடையே சண்டை ஏற்பட்டது. தங்களுக்குள்ளேயே சண்டையிட்டு மடிந்தனர். பின்னர் கிருஷ்ணரது மூத்த சகோதரர் பலராமர் யோகநிலையின் மூலம் உடலைக் கைவிட்டு வைகுண்டத்தை அடைந்தார். பின்னர் காட்டில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த கிருஷ்ணனை ஜாரன் என்ற வேட்டைக்காரன், மான் என நினைத்து அம்பெய்தினான். பின்பு, கிருஷ்ணன் கோலோகா பிருந்தாவனத்திற்கு பூமியிலிருந்து புறப்பட்டதாகக் கூறப்படுகிறது[1][2] இந்நிகழ்வே கிருஷ்ணர் பூமியிலிருந்து வைகுண்டத்திற்குப் புறப்பட்ட நிகழ்வாக கருதப்படுகிறது.[3][4][5] இந்நிகழ்வைக் கண்ணால் கண்டவர்கள் அஸ்தினாபுரத்திலிருந்த பாண்டவர்களுக்கும் துவாரகை மக்களுக்கும் தகவல் கூறியதாகக் கருதப்படுகிறது. கிருஷ்ணர் பூமியிலிருந்து புறப்பட்டு வைகுண்டத்திற்குச் சென்ற இடமே பால்கா என்று அறியப்படுகிறது.[1][2]

இடம்[தொகு]

சோமநாத் கோயிலிலிருந்து கிட்டத்தட்ட 4 கிலோமீட்டர் தொலைவில் பால்கா கோயில் அமைந்துள்ளது. தற்போது இந்த கோயிலை ஒரு முக்கிய சுற்றுலா தலமாக உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.அகமதாபாத், வதோதரா, ராஜ்கோட், துவாரகா போன்றவற்றிலிருந்து பேருந்து சேவைகள் கிடைக்கின்றன.[6]

படங்கள்[தொகு]


மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Bhalka Tirth". Somnath Trust. மூல முகவரியிலிருந்து 29 July 2009 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 12 April 2015.
  2. 2.0 2.1 "Gujarat Tourism". Gujarat Tourism. பார்த்த நாள் 12 April 2015.
  3. Bryant 2007, pp. 148
  4. Kisari Mohan Ganguli (2006). "The Mahabharata (originally published between 1883 and 1896)". Sacred Texts. பார்த்த நாள் 2008-10-13.
  5. Vettam Mani (1975). Puranic Encyclopaedia: A Comprehensive Dictionary With Special Reference to the Epic and Puranic Literature. Delhi: Motilal Banarsidass. பக். 429. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8426-0822-2. https://archive.org/details/puranicencyclopa00maniuoft. 
  6. "Addl trains chief demand at rly meet". Times of India (Jan 29, 2015). பார்த்த நாள் 7 April 2015.