குஜராத்தின் இசை
மேற்கு இந்தியா மாநிலமான குஜராத், நாட்டுப்புற மற்றும் பாரம்பரிய இசை இரண்டிலுமே இசை மரபுகளுக்குப் பெயர் பெற்றதாகும்.
நாட்டுப்புற இசை[தொகு]
குஜராத்தி நாட்டுப்புற இசை பல்வேறு பாடல் மற்றும் இசை வகைகளைக் கொண்டுள்ளது. மரிலா தோல் டி பாகர் மாரோ இச் லெட் டி போன்ற பக்திப் பாடல் வகைகளும், கவிதைகள் மற்றும் கவிதை/பாடல் வரிகளைக் கொண்ட இசைத்தொகுப்புகளும் நிறைந்து காணப்படுகிறது. மேலும் பிரபாதி, கட்டாரி, டோல் போன்ற இசைக் கோவைகளால் இவ்வகை பாடல்கள் பாடப்படுகின்றன. பரோட், சரண் மற்றும் காத்வி இனக்குழுக்களைச் சார்ந்த மக்கள் சமூகங்கள் இசையுடனோ அல்லது இசையில்லாமல் பாடல் வடிவில் கதை சொல்லும் நாட்டுப்புறப் பாரம்பரியத்தை இன்னமும் பாதுகாத்து வளப்படுத்தி வருகின்றனர். இதில் தோஹா, சோரத்தா, சந்த் போன்ற பாடல் வகைகளும் அடங்கும். [1]
பாரம்பரிய நடன வடிவங்களான கர்பா, தண்டியா ராஸ், பதர், டாங்கி மற்றும் டிப்பானி போன்ற பாடல்களும் இசைத்தொகுப்புகளும் இயற்கையாகவே தனித்துவமான திறனைக் கொண்டுள்ளது.[1]
டேரோ [2] மற்றும் லோக்வர்தா ஆகிய பெயர்களில் குஜராத்தி இசை நிகழ்ச்சிகளை மத மற்றும் சமூகம் சார்ந்த பாடல்களை, இசையை நிகழ்த்தும் இசைக்கலைஞர்கள் நடத்துவார்கள். திரள் திரளான மக்கள் வந்து அந்நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு இசையை பருகி மகிழ்வார்கள். மராசியா வகை இசைத்தொகுப்புகள் என்பது மர்சியாவிலிருந்து உருவான இசையின் நேர்த்தியான வடிவம் மற்றும் வீர மரணம் அடைந்தோரை கௌரவிக்கும் வகையில் இசைப்பதாகும். ஃபட்டன்னா அல்லது லக்ன கீதங்கள் என்பது திருமணத்தின் போது இசைக்கப்படும் பாடல் மற்றும் இசையின் ஒளி வடிவமாகும். [1]
பாவாய் மற்றும் அக்கியானா ஆகியவை குஜராத்தில் நடத்தப்படும் நாட்டுப்புற இசை நாடகமாகும். தமிழர்களின் கூத்து கட்டுதல் போன்றே இவ்வகை நாடகங்கள் நிகழ்த்தப்படுகின்றன.
சிறப்புகள்[தொகு]
பாரம்பரிய இசைக்கலைஞர்கள் மற்றும் இசையமைப்பாளர்களான ஃபயாஸ் கான் மற்றும் பண்டிட் ஓம்கர்நாத் தாக்கூர் ஆகியோர் குஜராத் இசைப்பிரிவின் ஹவேலி சங்கீதத்தின் பாரம்பரியத்தை சிறப்பித்து வருகின்றனர்
மேற்கோள்கள் [தொகு]
- ↑ 1.0 1.1 1.2 Patil, Vatsala (13 February 2015). "Notes make a culture". http://indiatoday.intoday.in/story/notes-make-a-culture/1/418702.html. பார்த்த நாள்: 12 June 2016.
- ↑ BhumiStudio Bhaguda (2017-06-28), Kirtidan Gadhvi | Mangaldham Bhaguda 2017 | Chunariya | 21 Mo Patotsav_Om Bhumi Studio HD, retrieved 2019-07-23