குசும்குமாரி தாஸ்
குசும்குமாரி தாஸ் | |
---|---|
![]() | |
பிறப்பு | 1875 பேகர்கஞ்ச், வங்காள மாகாணம், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு |
இறப்பு | 1948 (அகவை 72–73) கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்திய மேலாட்சி அரசு |
வாழ்க்கைத் துணை | சத்யானந்த தாஸ் |
பிள்ளைகள் | 3 |
குசும்குமாரி தாஸ் (Kusumkumari Das 1875–1948) ஒரு வங்காளக் கவிஞர், எழுத்தாளர், சமூக ஆர்வலர் ஆவார். இவர் ஒரு கவிஞராகவும், நவீன வங்காள இலக்கியத்தின் பரவலாக அறியப்பட்ட கவிஞரான ஜிபானந்த தாசின் தாயாராகவும் அறியப்படுகிறார். மேலும் பரிசால் மகளிர் சங்கத்தின் செயலாளராகவும் பணியாற்றினார். [1]
வாழ்க்கை வரலாறு
[தொகு]இவர் கல்கத்தா பெதுன் பள்ளியில் கல்வி பயின்றார். 19 ஆம் வயதில், 1894 இல் சத்யானந்த தாசை மணந்தார். ஜிபானந்த தாஸ், அசோகனந்த தாஸ் எனும் இரண்டு மகன்களும் சுசரிதா எனும் மகளும் பிறந்தனர்.
தனது தந்தையிடமிருந்து எழுத்துலகின் தாக்கம் பெற்றார். பல பத்திரிகைகளில் கவிதைகளை வெளியிட்டார், அவற்றில் ''முகுல்'', ''பிரம்மபதி'' மற்றும் ''பிரவாசி'' ஆகியவை குறிப்பிடத்தகுந்தனவாகும்.[2]
சமூக நடவடிக்கைகளிலும் இவர் தீவிரமாகப் பங்கேற்றார். பிரம்ம சமுதாயத்தின் பெண் உறுப்பினராக, பரிசாலில் சமூக நடவடிக்கைகளில் பெண்கள் பங்கேற்பதற்கு முன்னோடியாக இருந்தார். வங்காள நாட்காட்டியின்படி 1319 முதல் 1338 வரை மகளிர் தின பிரார்த்தனையில் ஆச்சார்யாவாகச் செயல்படுகிறார். இவர் சில சமயங்களில் பிரசோமசின் பொதுக் குழுவிலும் ஆச்சார்யாவாகச் பாரிசால் பெண்கள் சங்கத்தின் செயலாளராக இருந்தார். [3] இந்தச் சங்கம் ஏழைப் பெண்களுக்கு உதவுதல், மருத்துவச்சிகளுக்கு பயிற்சி அளித்தல், பெண்கள் பள்ளியை நிறுவுதல், பெண்களுக்கு கல்வியை எளிதாக்குதல் போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டது.
வெளியீடுகள்
[தொகு]- காவ்யமுகுல்
- பௌரானிக் அக்யாயிகா
- குசும்குமாரி தாசர் கபிதா
- டைனண்டின் டின்லிபி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Salekeen, Seraj (2018). Jibanananda Das জীবনানন্দ দাশ. Jibani Granthamal [Biography Series]. Dhaka: Kathaprokash. pp. 7, 22.
আমৃত্যু নির্জন, অথচ মৃত্যুপরবর্তী কিছুকালের মধ্যে সমকালীন বাংলা কবিতার অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হন জীবনানন্দ দাশ। Despite being desolate till death, Jibanananda Das became one of the popular poets of contemporary Bengali poems immediately after his death.
- ↑ Syed, Abdul M. (1998). "Apendixes: Life". In Abdul M. Syed (ed.). Jibanananda Dases Prakashita-Oprakashita KabitaSamagra (A collection of Complete poems: Published and Unpublished by Jibanananda Das) (in Bengali). Dhaka: Abasar. p. 606.
- ↑ Guha, Vumendra (2012). "Introduction". In Vumendra Guha (ed.). Kusumkumari Daser Dainandin Lipi (Daily Entries: The Diary) (in Bengali) (1st ed.). Dhaka: Abasar. p. 11. ISBN 978-984-8793-98-5.