குசால் கான்வார் சர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குசால் கான்வர் சர்மா
தேசியம்இந்தியன்
பணிகால்நடை மருத்துவர்
அறியப்படுவதுயானை மருத்துவர்
மருத்துவப் பணிவாழ்வு
களம்அறுவைச் சிகிச்சை, கதிரியக்கம்

குசால் கான்வர் சர்மா (Kushal Konwar Sarma) (அசாமி: কুশল কোঁৱৰ শৰ্মা) அசாமைச் சார்ந்த இந்தியக் கால்நடை மருத்துவர் ஆவார். இவர் அசாமின் யானை மருத்துவர் எனப் புகழ்பெற்றவர். சர்மாவுக்கு 2020ஆம் ஆண்டில் மருத்துவத் துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காகப் பத்மசிறீ விருது வழங்கப்பட்டது. [1]

தொழில்[தொகு]

சர்மா யானைகளுக்கு மருத்துவம் பார்க்கும் கால்நடை மருத்துவர் ஆவார். இவர் அசாமின் குவகாத்தியில் உள்ள கால்நடை அறிவியல் கல்லூரியில் அறுவைச் சிகிச்சை மற்றும் கதிரியக்கவியல் பேராசிரியர் ஆவார். பெரும்பாலும் இவர் யானைகளுக்கு சிகிச்சையளிக்ககும் பணியினை அயராது மேற்கொண்டுள்ளார். இவர் 139 சிறைபிடிக்கப்பட்ட முரட்டு யானைகளைப் பழக்கப்படுத்திச் சாந்தப்படுத்தியுள்ளார். இவர் சுமார் 100 காட்டு யானைகளுக்குச் சிகிச்சை அளித்து மற்றும் இடமாற்றத்திற்கு வழிவகுத்துள்ளார். சராசரியாக, இவர் ஒரு வருடத்திற்கு 750-800 யானைகளுக்குச் சிகிச்சை அளித்துப் பழக்கும் செயலைச் செய்கிறார்.[2]

விருதுகள்[தொகு]

  • பத்மசிறீ - இந்தியாவின் 4வது மிக உயர்ந்த குடிமை விருதானது, பத்மசிறீ விருது இவருக்கு 2020ஆம் ஆண்டு சனவரி 26ஆம் நாளன்று வழங்கப்பட்டது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Assam's 'elephant doctor' awarded Padma Shri: 'This land belongs to the elephants'". The Indian Express (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 25 January 2020.
  2. "Finally, Assam's 'Elephant Doctor' gets his dues". The New Indian Express (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 26 January 2020.
  3. "Padma Awards List 2020" (PDF). Padma Awards, Government of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 4 September 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குசால்_கான்வார்_சர்மா&oldid=3074597" இலிருந்து மீள்விக்கப்பட்டது