உள்ளடக்கத்துக்குச் செல்

குசாப் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குசாப்
மாவட்டம்
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் குசாப் மாவட்டததின் அமைவிடம்
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் குசாப் மாவட்டததின் அமைவிடம்
நாடு பாக்கித்தான்
மாகாணம்பஞ்சாப்
கோட்டம்சர்கோதா
நிறுவிய ஆண்டு2 சூலை 1982[1]
தலைமையிடம்ஜௌகராபாத்
அரசு
  வகைமாவட்டம் (நிர்வாகி-துணை ஆணையாளர்)
பரப்பளவு
  மாவட்டம்6,511 km2 (2,514 sq mi)
மக்கள்தொகை
 (2023)[3]
  மாவட்டம்15,01,089
  அடர்த்தி230.5/km2 (597/sq mi)
  நகர்ப்புறம்
4,18,745
  நாட்டுப்புறம்
10,82,344
எழுத்தறிவு
  சராசரி எழுத்தறிவு
  • மொத்தம்:
    (62.52%)
  • ஆண்
    (75.59%)
  • பெண்:
    (49.03%)
நேர வலயம்ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்)
இடக் குறியீடு0454
வருவாய் வட்டங்கள்4
மொழிபஞ்சாபி மொழி
இணையதளம்khushab.punjab.gov.pk

குசாப் மாவட்டம் (Khushab District), பாக்கித்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் 41 மாவட்டங்களில் ஒன்றாகும். பஞ்சாபின் வடக்கில் அமைந்த இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஜௌகராபாத் நகரம் ஆகும். ஜௌகராபாத் நகரமானது, பஞ்சாப் மாகாணத் தலைநகரான லாகூருக்கு வடமேற்கே 241 கிலோமீட்டர் தொலைவிலும், நாட்டின் தலைநகரான இசுலாமாபாத்துக்கு தெற்கே 227 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இம்மாவட்டத்தின் ஒரு பகுதியில் உப்பு மலைத்தொடர் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தில் அணுக்கரு உலைக்கு தேவையான கன நீர் உற்பத்தி செய்யப்படுகிறது[5] மற்றும் சிறப்பு இராணுவ ஆயுதத் தளவாடத் திட்டங்களைக் கொண்டுள்ளது.[6] இம்மாவட்டத்தில் இந்து ஷாகி மன்னர்களால் கிபி 7 முதல் 9ஆம் நூற்றாண்டு வரையான காலத்தில் கட்டப்பட்ட அம்ப் கோயில்கள் உள்ளது.

மாவட்ட எல்லைகள்

[தொகு]

குசாப் மாவட்டத்தின் வடக்கே சாகிவால் மாவட்டம், கிழக்கில் சர்கோதா மாவட்டம், தெற்கில் பாக்கர் மாவட்டம், மேற்கில் மியான்வாலி மாவட்டம் எல்லைகளாக உள்ளது.

மாவட்ட நிர்வாகம்

[தொகு]

இம்மாவட்டம் குசாப் வட்டம், நூர்பூர் தால் வட்டம், குவய்தாபாத் வட்டம் மற்றும் நௌசெரா வட்டம் எனும் 4 வருவாய் வட்டங்களையும்[7], 51 ஒன்றியக் குழுக்களையும் கொண்டுள்ளது.[8]

புவியியல்

[தொகு]

சிந்து ஆறு மற்றும் ஜீலம் ஆறுகளுக்கு இடையே அமைந்த குசாப் மாவட்டப் பகுதிகளில் சில தால் பாலைவனத்தில் உள்ளது. இதன் பள்ளத்தாக்குகளில் மூன்று நன்னீர் ஏரிகள் உள்ளதால் வேளாண்மை செய்யப்படுகிறது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2023 பாக்கித்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 248,304 குடியிருப்புகள் கொண்ட மாவட்ட மக்கள் தொகை 1,501,089 ஆகும். பாலின விகிதம் 100 பெண்களுக்கு ஆண்கள் 104.80 வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 62.52% ஆகும்.[9][10]இதன் மக்கள் தொகையில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 371,528 (24.75%) ஆக உள்ளனர்.[11]நகர்புறங்களில் 418,745 (27.90%) lமக்கள் வாழ்கின்றனர்.[9]

சமயம்

[தொகு]

இம்மாவட்டத்தில் இசுலாம் 98.95%, கிறித்துவம் 1% மற்றும் பிற சமயங்களை 0.15% மக்கள் பின்பற்றுகின்றனர்[12].

மொழிகள்

[தொகு]

இம்மாவட்டத்தில் பஞ்சாபி மொழியை 92.38% மக்களும், பஷ்தூ மொழியை 2.05% மக்களும், சராய்கி மொழியை 2.39% மக்களும் மற்றும் உருது மொழியை 1.43% மக்களும் தாய் மொழியாகப் பேசுகின்றனர்.[13]

பஞ்சாப் (பாகிஸ்தான்) மாகாணத்தின் 41 மாவட்டங்கள்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "District Courts Khushab". Archived from the original on 22 June 2015. Retrieved 8 November 2013.
  2. "Khushab – Punjab Portal". Archived from the original on 20 December 2016. Retrieved 15 December 2016.
  3. "TABLE 1 : HOUSEHOLDS, POPULATION, HOUSEHOLD SIZE AND ANNUAL GROWTH RATE" (PDF). www.pbscensus.gov.pk. Pakistan Bureau of Statistics. 2023.
  4. "Literacy rate, enrolments, and out-of-school population by sex and rural/urban, CENSUS-2023" (PDF).
  5. "Special Weapons Program of Pakistan (Federation of American Scientists)". Archived from the original on 2021-04-19. Retrieved 2025-08-02.
  6. South Asia arms race - is it paranoia? (BBC News).
  7. "Tehsil Codes" (PDF). Archived from the original (PDF) on 2011-06-26. Retrieved 28 January 2023.
  8. "Tehsils & Unions in the District of Khushab". National Reconstruction Bureau - Government of Pakistan website. Archived from the original on 2008-01-24. Retrieved 28 January 2023.
  9. 1 2 "7th Population and Housing Census - Detailed Results: Table 1" (PDF). Pakistan Bureau of Statistics.
  10. "7th Population and Housing Census - Detailed Results: Table 12" (PDF). Pakistan Bureau of Statistics.
  11. "7th Population and Housing Census - Detailed Results: Table 5" (PDF). Pakistan Bureau of Statistics.
  12. "District Wise Results / Tables (Census - 2023)" (PDF). www.pbscensus.gov.pk. Pakistan Bureau of Statistics.
  13. "Pakistan Census 2023" (PDF).

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=குசாப்_மாவட்டம்&oldid=4580138" இலிருந்து மீள்விக்கப்பட்டது