குசாங் டோர்ஜி செர்ப்பா
குசாங் செர்ப்பா | |
|---|---|
| பிறப்பு | குசாங் தோர்ஜி செர்ப்பா 15 பெப்ரவரி 1965 ஓலாங்சங் கோலா, நேபாள இராச்சியம் |
| இறப்பு | 7 திசம்பர் 2024 (அகவை 59) டார்ஜீலிங், மேற்கு வங்காளம், இந்தியா |
| தேசியம் | |
| பிள்ளைகள் | 4 |
குசாங் டோர்ஜி செர்ப்பா (Kushang Dorjee Sherpa) (15 பிப்ரவரி 1965 - 7 டிசம்பர் 2024) ஓர் இந்திய செர்ப்பா ஆவார். இவர் 1998-இல் மூன்று பக்கங்களிலிருந்து எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் மனிதர் ஆனார்.[1][2] இவரது சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாக, இந்திய அரசு இவருக்கு 2003 இல் டென்சிங் நோர்கே தேசிய சாகச விருதை வழங்கியது.[3]
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]குசாங் செர்ப்பா 1965 பிப்ரவரி 15 அன்று நேபாளத்தின் ஓலாங்சங் கோலாவில் பிறந்தார். தனது 14 வயதில் வீட்டை விட்டு ஓடிப்போய் தனது கிராமத்தின் வழியாகச் செல்லும் ஒரு பயணக் குழுவில் சுமை தூக்கும் பணியாளராகப் பணியாற்றினார். மூன்று பக்கங்களிலிருந்தும் எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய முதல் மனிதர் இவராவார்[1][2] செர்ப்பா 2015 ஆம் ஆண்டு நிலவரப்படி மேற்கு வங்காளத்தின் டார்ஜிலிங்கில் வசித்து வந்தார்.[1]
மலையேற்றம்
[தொகு]இவர் முதன்முதலில் 1993 மே 10 அன்று நிலையான தென்கிழக்கு முகடு பாதை வழியாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தார். மே 17, 1996-இல் நிலையான வடகிழக்கு முகடு பாதை வழியாகவும், மே 28, 1998 அன்று, நிலையான தென்கிழக்கு முகடு பாதையை மூன்றாவது முறையாகவும், 28 மே 1999- இல் எவரெஸ்டின் கிழக்கு முகம் வழியாக நான்காவது முறையாகவும் எவரெஸ்ட் சிகரம் அடைந்தார்.
இறப்பு
[தொகு]குசாங் செர்ப்பா டார்ஜிலிங்கில் உள்ள தனது வீட்டில் டிசம்பர் 7, 2024 அன்று தனது 59 வயதில் காலமானார்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 "The Sherpas of Everest Series". Retrieved 1 August 2015.
- 1 2 Bromwich, Kathryn (25 May 2013). "Conquering Everest: 60 facts about the world's tallest mountain". https://www.independent.co.uk/climate-change/news/conquering-everest-60-facts-about-the-world-s-tallest-mountain-8632372.html. பார்த்த நாள்: 10 October 2022.
- ↑ "A plot too far for ace mountaineer". Telegraph India. 15 October 2006. https://www.telegraphindia.com/west-bengal/a-plot-too-far-for-ace-mountaineer/cid/768367. பார்த்த நாள்: 19 September 2020.
- ↑ "Five-time Everester passes away at 59 in Darjeeling". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 8 December 2024. https://timesofindia.indiatimes.com/city/kolkata/beloved-five-time-everest-climber-kushang-dorjee-sherpa-dies-at-59/articleshow/116114841.cms.