குசராத் மத்தியப் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குசராத்து மத்தியப் பல்கலைக்கழகம்
Central University of Gujarat
வகைமத்தியப் பல்கலைக்கழகம்
உருவாக்கம்2009
வேந்தர்அசுமுக்கு ஆதியா[1]
துணை வேந்தர்இரமா சங்கர் துபே
நிருவாகப் பணியாளர்
முனைவர் சத்யபிரகாசு உபாத்யாயே (பதிவாளர்)
அமைவிடம்காந்திநகர், குசராத்து, இந்தியா
சேர்ப்புபல்கலைக்கழக மானியக் குழு, தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை, பொதுநலவாயப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு[2]
இணையதளம்www.cug.ac.in

குசராத் மத்தியப் பல்கலைக்கழகம் (Central University of Gujarat) இந்தியாவின் குசராத்து மாநிலம், காந்திநகரில் அமைந்துள்ளது. இந்திய பாரளுமன்றத்தின் மத்திய பல்கலைக்கழகங்கள் சட்டம் 2009 இன் அடிப்படையில் இப்பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. [3]

குசராத் மத்திய பல்கலைக்கழகத்தில் 16 பள்ளிகள், 14 கல்வித் துறைகள் மற்றும் 2 சிறப்பு மையங்கள் உள்ளன. [4]

அறிவை உருவாக்குதல் மற்றும் பகிர்தல் செயல்களை மேம்படுத்தி வளர்த்தல் என்பதே மத்தியப் பல்கலைக்கழகத்தின் முக்கிய நோக்கங்களாகக் கருதப்பட்டன. ஒருங்கிணைந்த மற்றும் இடைநிலைப் படிப்புகளுக்கான சிறப்பு ஏற்பாடுகளைச் செய்வதற்கும், நாட்டின் வளர்ச்சிக்கு மனிதவளத்தைப் பயிற்றுவிப்பதற்கும், பயிற்சியளிப்பதற்கும், கற்பித்தல் மற்றும் கற்றலில் புதுமைகளை மேம்படுத்துவதற்கான பொருத்தமான நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கும், சமூக மற்றும் பொருளாதார நிலைமைகள் மற்றும் நலனை மேம்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்துவதற்கும் பல்கலைக்கழகம் உறுதிபூண்டுள்ளது. மக்களின், குறிப்பாக அறிவுசார், கல்வி மற்றும் கலாச்சார வளர்ச்சியுடன் தொடர்பான திட்டங்களுடன் பல்கலைக்கழகம் நெருங்கிய தொடர்பு கொண்டு இயங்குகிறது.

இந்த பல்கலைக்கழகம் இந்தியாவின் ஒட்டுமொத்த தர வரிசையில் 60 ஆவது இடத்திலும், குசராத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் தரவரிசையில் 2016 ஆம் ஆண்டு 2 வது இடத்திலும் இருந்தது.

குறிக்கோள்[தொகு]

சமூகம் மற்றும் தொழில் இடைமுகத்துடன் மாணவர்களுக்கு அறிவு மற்றும் வேலைவாய்ப்புக்கான உலகளாவிய தளத்தை வழங்குதல்.

மத்தியப் பல்கலைக்கழக மசோதா 2009[தொகு]

பீகார், குசராத்து, அரியானா, இமாச்சலப் பிரதேசம், சம்மு காசுமீர், சார்க்கண்டு, கருநாடகம், கேரளம், ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் தலா ஒரு புதிய மத்திய பல்கலைக்கழகத்தை உருவாக்குவதை மத்திய பல்கலைக்கழக மசோதா 2009 நோக்கமாகக் கொண்டுள்ளது.[5] சத்தீசுகர் மாநிலத்திலுள்ள குரு காசிதாசு விசுவவித்யாலயா, மத்தியப் பிரதேச மாநிலம் சாகரிலுள்ள அரிசிங் கவுர் விசுவவித்யாலயா, ஒடிசா மாநிலம் புவனேசுவரம் நகரிலுள்ள உட்கல் பல்கலைக்கழகம் , மற்றும் உத்தராகண்டம் மாநிலத்திலுள்ள ஏமாவதி நந்தன் பகுகுணா கார்வால் பல்கலைக்கழகம் ஆகியனவற்றை மத்தியப் பல்கலைக்கழகங்களாக மாற்றவும் முனைந்தது. [6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Hasmukh Adhia appointed Chancellor of Central University of Gujarat". The Indian Express. https://indianexpress.com/article/india/hasmukh-adhia-appointed-chancellor-of-central-university-of-gujarat-5617767/lite/. பார்த்த நாள்: 14 May 2019. 
  2. "Association of Commonwealth Universities Membars-Asia". https://www.acu.ac.uk/membership/acu-members/asia. 
  3. "Central Universities Act, 2009" (PDF). Central University of Bihar. 15 May 2012 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 24 February 2012 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Annual Report 2015-16" (PDF). Central University of Gujarat. 5 ஜூலை 2017 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 5 July 2018 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  5. "List of Central Universities in India" (PDF). education.nic.in. 22 February 2012 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 5 July 2018 அன்று பார்க்கப்பட்டது.
  6. "Parliament passes bill to set 12 central varsities". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 25 February 2009. Archived from the original on 2012-07-08. https://archive.today/20120708062215/http://articles.timesofindia.indiatimes.com/2009-02-25/india/28034296_1_harisingh-gour-vishwavidyalaya-guru-ghasidas-vishwavidyalaya-central-universities. 

புற இணைப்புகள்[தொகு]