குங்குமப்பூ சாதம்
பாசுமதி குங்குமப்பூ சாதம் | |
| பரிமாறப்படும் வெப்பநிலை | ஈற்றுணவு |
|---|---|
| பகுதி | ஈரான் |
| முக்கிய சேர்பொருட்கள் | அரிசி, குங்குமப்பூ, காய்கறி |
| வேறுபாடுகள் | செர்தே |
குங்குமப்பூ சாதம் (Saffron rice) என்பது குங்குமப்பூ, வெள்ளை அரிசி சாதம், பொதுவான காய்கறிகள் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் ஓர் உணவாகும்.[1][2] குங்குமப்பூ சாதம் பல நாடுகளின் உணவு வகைகளில் (ஏதோ ஒரு வடிவத்தில்) காணப்படுகிறது. இந்த செய்முறையானது பொருட்களைச் சேர்த்து சாதாரணமாக சமைத்த அரிசி போன்றது.
மாறுபாடுகள்
[தொகு]குங்குமப்பூ சாதம் என்பது சீஷெல்ஸின் உணவு வகைகளில் ஓர் உணவாகும் .[3]
தெற்காசியா
[தொகு]வங்களாதேசம், பாக்கித்தான், இந்தியாவில், சாதாரண குங்குமப்பூ சாதம், சோகா அல்லது பாசுமதி, குங்குமபூ, காய்கறி, நெய், பட்டையுடன் இலைகளுடன் சமைக்கப்படுகிறது.
மத்திய கிழக்கு
[தொகு]ஈரானில், குங்குமப்பூ சாதம் பொதுவாக தாச்சின் போன்ற சுவையான உணவுகளுகடன் பரிமாறப்படுகிறது. ஈரானிலும் துருக்கிலும், சோலெசார்ட், ஜெர்டே என்று அழைக்கப்படும் இனிப்பு குங்குமப்பூ, அரிசி, சர்க்கரை, பன்னீர், வறுத்த பைன் விதைகள் மற்றும் நறுக்கப்பட்ட பிசுதா கொட்டைகள் ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
மேற்கு ஆசியாவின் பிற பகுதிகளிலும் இதே போன்ற உணவுகள் உள்ளன.