குக்ரைல் ஆறு
குக்ரைல் ஆறு (Kukrail River) இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாயும் ஓர் ஆறாகும். கோமதி ஆற்றின் இடது கரையில் பாயும் சிறிய துணை ஆறான இது இலக்னோவில் கோமதி ஆற்றுடன் கலக்கிறது.[1]
ஆற்றின் பாதை
[தொகு]இலக்னோவின் பக்சி கா தலாப் நகரத்தில் ஆசுட்டி கிராமத்தில் உள்ள தாசூர் பாபா குளத்திற்கு அருகிலுள்ள கிணற்றில் இருந்து குக்ரைல் ஆறு உருவாகிறது. பின்னர் இது குக்ரைல் காப்புக்காடு வனப்பகுதி வழியாக சுமார் 6 கி. மீ. தூரம் பயணிக்கிறது. கோமதி நதியுடன் இணைவதற்கு முன்பு சுமார் 28 கிமீ நீளமுள்ள ஆறாகப் பாய்கிறது.[2][3]
வரலாறு.
[தொகு]உள்ளூர் நாட்டுப்புறக் கதைகளின்படி, குக்ரைல் ஆறு சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது. முதன்முதலில் 1904 ஆம் ஆண்டு அரசிதழில் ஆவணப்படுத்தப்பட்டது. 1960 ஆம் ஆண்டில், இதன் நீர் மட்டம் 113.2 மீட்டர்களை எட்டியது. இதனால் 1962 ஆம் ஆண்டில் ஆற்றின் குறுக்கே கரைகள் கட்டப்படுவதற்கு வழிவகுத்தது. 1980 ஆம் ஆண்டில், குக்ரைல் மற்றும் கோமதியின் பிற துணை நதிகளுக்கு இடையிலான நிலம், நகராட்சி சிலெட் பண்ணை என்று அழைக்கப்படுகிறது. இப்பண்ணை இலக்னோ மேம்பாட்டு ஆணையத்தின் வளர்ச்சிக்காக வழங்கப்பட்டது.[3]
பாதுகாப்பு
[தொகு]2024 ஆம் ஆண்டில், குக்ரைல் ஆற்றின் குறுக்கே 50 மீட்டர் நீளமுள்ள பகுதி வெள்ளச் சமவெளியாக அறிவிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக இலக்னோ மேம்பாட்டு ஆணையம் அக்பர் நகர் பகுதியில் ஒரு பெரிய இடிப்பு நடவடிக்கையை நடத்தியது. அங்கு 1,800 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட சட்டவிரோத கட்டமைப்புகள் அகற்றப்பட்டன.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Saigal, Gaurav. "The way forward: Let the 'living river' flow freely". Hindustan Times. Hindustan Times. Retrieved 6 February 2024.
- ↑ 2.0 2.1 "50 metres area along Kukrail river declared ‘floodplain’". The Times of India. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-8257. https://timesofindia.indiatimes.com/city/lucknow/50-metres-area-along-kukrail-river-declared-floodplain/articleshow/111120565.cms.
- ↑ 3.0 3.1 "A River That Was...". The Times of India. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-8257. https://timesofindia.indiatimes.com/city/lucknow/revival-of-kukrail-river-in-lucknow-by-yogi-adityanath-government/articleshow/110923538.cms.