குக்யர்கள்
குக்யர் (கள்) (Guhyaka) (गुह्यक, அதாவது "மறைக்கப்பட்டவை") என்பது இந்து புராணங்களில் காணப்படும் இயற்கைக்கு அப்பாற்பட்ட உயிரினங்களின் ஒரு வகுப்பாகும். இயக்கர்களைப் போலவே, செல்வத்தின் கடவுளான குபேரனின் உதவியாளர்களாகவும், அவருடைய மறைந்திருக்கும் பொக்கிசங்களைப் பாதுகாப்பவர்களாவும் இவர்கள் விவரிக்கப்படுகிறார்கள். குக்யர்கள் மலைக் குகைகளில் வாழ்வதாக நம்பப்படுகிறது. அதனால் இவர்களின் பெயர், "மறைந்திருப்பவர்களாக" சித்தரிக்கப்படுகிறது. [1] இவர்களின் அதிபதி குபேரன் "குக்யகாதிபதி" என்று அழைக்கப்படுகிறார். [2]
விளக்கம்
[தொகு]அமெரிக்க சமசுகிருத அறிஞரான எட்வர்ட் வாச்பர்ன் ஆப்கின்சு, இவர்கள் தனித்துவமான உயிரினங்கள் அல்ல, ஆனால் மறைந்திருந்திருக்கும் ஆவிகளுக்கான பொதுவான பெயர் என்கிறார். [2] இவர்கள் மனுதரும சாத்திரம், அரி வம்சம், மகாபாரதத்தின் பிற்சேர்க்கையில், தனித்துவமான மனிதர்களாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.[3] இருப்பினும், மேகதூதம் இவர்களை இயக்கர்களுடன் அடையாளப்படுத்துகின்றன. [3] [4]
கயிலை மலையில் இவர்களுடன் வசிக்கும் குபேரனின் மிகவும் நம்பகமான மற்றும் நெருங்கிய கூட்டாளிகளாக குக்யர்ககள் விவரிக்கப்படுகிறார்கள். கடவுளுக்கும் இதிகாச நாயகன் இராமனுக்கும் போரில் உதவுவதற்காக அவருக்கு மந்திரக் கண்களைக் கழுவுதல் போன்ற முக்கியமான பணிகளை குபேரன் இவர்களுக்கு வழங்குகிறான். [2] இவர்கள் தூதர்களாகவும் பணியாற்றுகிறார்கள். மேலும் போர்களுக்கு சாட்சியாகவும் அனுப்பப்படுகிறார்கள். [5] மற்ற நிகழ்வுகளில், இவர்கள் ஹேமகூடத்தில் அல்லது குபேரனின் அரண்மனையில் உள்ள கந்தமந்தன மலையில் வசிப்பதாக விவரிக்கப்படுகிறார்கள். [6] இவர்கள் பூமியிலும் மலைகளிலும் வாழ்கிறார்கள். [5] இவர்கள் இயற்கையில் பாதி பறவை அல்லது அரை குதிரை என விவரிக்கப்படுகின்றனர். [7] இவர்கள் பரலோகத்தில் ஒளிரும் வடிவங்களைக் கொண்டுள்ளனர். போரின் போது பேய் வடிவங்களை எடுத்துக்கொள்கிறார்கள். பூமியில் குட்டி மனிதர்களைப் போல இருக்கிறார்கள். [5]
மகாபாரதம், இவர்களை ஒரு வகை இயக்கர்களாகக் கருதுகிறது. குபேரனின் வான் அரண்மனைகள் குக்யர்களால் பாதுக்காக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிடுகிறது. [8] காவியத்தில் வீமன், குபேரனின் கந்தமந்தனைத் தாக்கி அவர்களைக் கொல்கிறான் என்றும் விவரிக்கப்பட்டுள்ளது. [2] [9] மகாபாரதப் போரில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, வீரமோ, கோழையோ இல்லாமல் வாளால் இறக்கும் வீரர்கள், மரணத்திற்குப் பிறகு குக்யர்களின் இருப்பிடத்திற்குச் செல்வதாகக் கூறப்படுகிறது.[5] [7] குக்யர்கள் பித்ருக்களுடன் ("மூதாதையர்கள்") தொடர்புடையவர்களாகவும் சில சமயங்களில் பேய்களுக்கு சமமானவர்களாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள். [5]
மருத்துவக் கடவுள்களான இரட்டையர் அஸ்வினிகள் எனவும், தாவரங்கள் மற்றும் கீழ்மையான விலங்குகளாகவும் இவர்கள் விவரிக்கப்படுகின்றனர். [7] [10] பாகவத புராணத்தில், குபேரனின் மகன் நளகுவரனும், மணிக்ரீவனும் குக்யர்களாக விவரிக்கப்படுகிறார்கள். [2]
குபேரனுடன் அடிக்கடி தொடர்புடையவர்களாக இருந்தாலும், வராகமிகிரரின் பிருகத்-சம்கிதை மற்றும் சில புராணங்கள் குக்யர்களை சூரியனின் மகனான இரேவந்தாவின் உதவியாளர்களாக விவரிக்கின்றன.[11]இரேவந்தா சூரியனால் குக்யர்களின்ன் தலைவனாக கடமையாற்றப நியமிக்கப்பட்டதாக மார்க்கண்டேய புராணம் குறிப்பிடுகிறது. [12] சிற்பங்களில், இரேவந்தா வேட்டையாடும் காட்சிகளில் குக்யர்களுடன் சித்தரிக்கப்படுகிறார். [13]
சான்றுகள்
[தொகு]- ↑ Monier-Williams, Monier (2008) [1899]. Monier Williams Sanskrit-English Dictionary. Universität zu Köln. p. 360.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 Hopkins pp. 144
- ↑ 3.0 3.1 Monier-Williams, Monier (2008) [1899]. Monier Williams Sanskrit-English Dictionary. Universität zu Köln. p. 360.Monier-Williams, Monier (2008) [1899]. Monier Williams Sanskrit-English Dictionary. Universität zu Köln. p. 360.
- ↑ Mani, Vettam (1975). Puranic Encyclopaedia: a Comprehensive Dictionary with Special Reference to the Epic and Puranic Literature. Motilal Banarsidass Publishers. p. 301.
- ↑ 5.0 5.1 5.2 5.3 5.4 Hopkins pp. 147-8
- ↑ Roshen Dalal (2010). Hinduism: An Alphabetical Guide. Penguin Books India. p. 151. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-14-341421-6.
- ↑ 7.0 7.1 7.2 Roshen Dalal (2010). Hinduism: An Alphabetical Guide. Penguin Books India. p. 151. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-14-341421-6.Roshen Dalal (2010). Hinduism: An Alphabetical Guide. Penguin Books India. p. 151. ISBN 978-0-14-341421-6.
- ↑ Hopkins pp. 142-3.
- ↑ Mani, Vettam (1975). Puranic Encyclopaedia: a Comprehensive Dictionary with Special Reference to the Epic and Puranic Literature. Motilal Banarsidass Publishers. p. 301. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8426-0822-0.Mani, Vettam (1975). Puranic Encyclopaedia: a Comprehensive Dictionary with Special Reference to the Epic and Puranic Literature. Motilal Banarsidass Publishers. p. 301. ISBN 978-0-8426-0822-0.
- ↑ Hopkins p. 55
- ↑ Monier-Williams 1899, ப. 888.
- ↑ Vibhuti Bhushan Mishra (1973). Religious Beliefs and Practices of North India During the Early Mediaeval Period. BRILL. p. 37. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-03610-5..
- ↑ Singh, Nagendra Kumar (1997), "Revanta in Puranic Literature and Art", Encyclopaedia of Hinduism, vol. 44, Anmol Publications, pp. 2605–19, 2611, 2613, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7488-168-9
புத்தகங்கள்
[தொகு]- Hopkins, Edward Washburn (1915). Epic mythology. Strassburg K.J. Trübner. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8426-0560-6.