உள்ளடக்கத்துக்குச் செல்

குக்கோல்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குக்கோல்ட்
முதல் பதிப்பு
நூலாசிரியர்கிரண் நகார்கர்
நாடுஇந்தியா
மொழிஆங்கிலம்
வெளியிடப்பட்டது1997 (ஹார்பர்காலின்ஸ் இந்தியா)
ஊடக வகைஅச்சு, மின்நூல்
பக்கங்கள்609
ISBN9788172232573

குக்கோல்ட் (Cuckold (novel)) என்பது இந்திய எழுத்தாளர் கிரண் நகார்கர் 1997 இல் எழுதிய புதினமாகும். இது இவரது மூன்றாவது புதினமாகும். [1] இது 16 ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் மேவார் என்ற ராஜபுத்திர இராச்சியத்தைக் களமாக கொண்ட ஒரு வரலாற்று புதினமாகும். இது மகாராஜ் குமாரின் வாழ்க்கையைப் பின்தொடர்கிறது. இது மேவார் இளவரசர் போஜ் ராஜின் சாயலில் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனைக் கதாபாத்திரமாகும். அவரது மனைவி மீராபாய் கிருட்டிணரை தனது கணவராக நினைத்து போஜ் ராஜை ஏற்க மறுக்கிறாள்.[2]

சுருக்கம்

[தொகு]

இந்தப் புத்தகம் மகாராஜ் குமாரின் வாழ்க்கையையும், அரச குடும்பத்தின் வாரிசு சண்டையையும், அப்பகுதியில் நடக்கும் போர்களால் அவர்களைச் சுற்றியுள்ளப் பகுதிகள் நாசமாகுவதையும், அவரது மனைவியான மீராவின் அன்பைப் பெற அவர் எடுக்கும் முயற்சிகளையும் பின்தொடர்வதாக உள்ளது.

விமர்சன வரவேற்பு

[தொகு]

குக்கோல்ட் நகர்கரின் மிகவும் பிரபலமான புதினங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மேலும் இவர் இந்தப் படைப்பிற்காக 2000 ஆம் ஆண்டில் இந்தியாவின் சாகித்ய அகாடமி விருதைப் பெற்றார். [3] "பாரம்பரிய கதையை தொடர்ச்சியான விவரங்களுடன் கூடிய ஒரு வரலாற்று பின்னணியில் கலந்து சொன்னதற்காக" இந்தப் புத்தகம் பாராட்டப்பட்டது.[4] "ரஜஸ்தானின் பிரம்மாண்டமான கோட்டைக்குள், மணல் மேடுகளுக்குள் புதையுண்டிருந்த வரலாறு நாவலில் அசலாக உயிர்பெறுகிறது." என்று எஸ். ராமகிருஷ்ணனால் பாராட்டபட்டது.[5]

தமிழ் மொழிபெயர்பு

[தொகு]

இந்த புதினத்தை அக்களூர் ரவி தமிழில் கனவில் தொலைந்தவன் என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளார்.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Deshpande, Anirudh (11–17 May 2002). "Interpretative Possibilities of Historical Fiction: Study of Kiran Nagarkar's Cuckold". Economic and Political Weekly 37 (19): 1824–1830.
  2. Nagarkar, Kiran (20 October 2015). Cuckold. HarperCollins. ISBN 9789351770107.
  3. Wiemann, Dirk (2008). Genres of Modernity: Contemporary Indian Novels in English. Rodopi. pp. 131–156. ISBN 978-9042024939.
  4. Sanga, Jaina C. (2003). South Asian Novelists in English. Greenwood. p. 179. ISBN 978-0313318856.
  5. 1 2 போரின் விலை, கட்டுரை, எஸ். ராமகிருஷ்ணன், இந்து தமிழ் திசை, 6 சூலை 2025
"https://ta.wikipedia.org/w/index.php?title=குக்கோல்ட்&oldid=4308259" இலிருந்து மீள்விக்கப்பட்டது