குக்கூ காட்டுப்பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பள்ளி
குக்கூ காட்டுப்பள்ளி, புளியனூர் கிராமம், சிங்காரப்பேட்டை, கிருஷ்ணகிரி மாவட்டம்

குக்கூ காட்டுப்பள்ளி என்பது தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புளியனூர் கிராமத்தில் அமைத்திருக்கும் சூழலியல் பள்ளி ஆகும். இப்பள்ளியை குக்கூ அமைப்பைச் சார்ந்தவர்கள் தொடங்கியுள்ளனர்.[1][2][3]

 தோற்றம்[தொகு]

குக்கூ காட்டுப்பள்ளி குக்கூ குழந்தைகள் வெளியின் சிவராஜ், அழகேஸ்வரி போன்றோரால் 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. வானுயர்ந்த கட்டடங்கள் என்றில்லாமல் இயற்கையான சூழலில் சிமெண்ட் மணல் பயன்படுத்தாமல் அங்குள்ள களிமண்ணைப் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது. இயற்கையோடு வாழ் இயற்கைக்குத் திரும்பு என்பதையே இலக்காகக் கொண்டு செயல்படும் இப்பள்ளியில் பல் துலக்கக்கூட பற்பசையைப் பயன்படுத்தாமல் ஆலம், வேலம். வேம்பு போன்ற இயற்கை பொருள்களை பயன்படுத்துவது இப்பள்ளி தொடங்கப்பட்ட நோக்கத்தைச் சொல்லிவிடுகிறது. குழந்தைகளை மிகவும் நேசிப்பவரும் பொம்மைகளை உருவாக்குவதில் வல்லமை பெற்றவருமான அரவிந்த் குப்தா அவர்களைக் கொண்டு இப்பள்ளி திறப்பு விழாக் கண்டது. 

பள்ளியின் நோக்கம்[தொகு]

சுமையற்ற கற்றல்; சுவர்களற்ற கற்றல் என இப்பள்ளியின் கற்றல் எல்லை விரிவானது. குழந்தைகளுக்கு அடிப்படைக் கல்வியோடு, இயற்கை வழி விவசாயம் ,மருத்துவம், அரசியல் குறித்த விவாதங்கள், விலங்குகள், பூச்சிகள், வானியல், நட்சத்திரம், குறித்த கற்பித்தல் , கூடை முடைவது, தையல் கலை, காகிதம் தயாரிப்பது, மண், மரம், காகிதம், ,சிரட்டை இவற்றைக் கொண்டு பொம்மைகள், சிற்பங்கள் செய்வது, ஓவியம் வரைவது, பறவைகளின் சப்தம் கொண்டு இசைக் கோர்வை உருவாக்குவது, கதை சொல்லுவது, நாடகம் நடிப்பது, கூத்துப் பயிற்சிகள்  என்பதையே குக்கூ காட்டுப்பள்ளி தன் முதன்மை நோக்கங்களாகக் கொண்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]