குக்கூ கவிதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

குக்கூ என்பது ஒரு கவிதை வகையாகும்.இதனைத் தமிழில் அறிமுகப்படுத்தியவர் மீரா(மீ.ராசேந்திரன்)

தோற்றம்[தொகு]

ஹைக்கூ தமிழில் பரவிக்கொண்டிருந்தபோது கவிஞர் மீரா நானும் ஹைக்கூ எழுதிக்கொண்டிருக்கிறேன்.ஆனால்அந்த இலக்கணத்தை அப்படியே பின்பற்றவில்லை எனக்கூறி குக்கூ வகையை அறிமுகப்படுத்தினார்.இதனை குக்கூ என்ற நுலின் அணிந்துரையில் அப்துல்ரகுமான் குறிப்பிடுகிறார்.

குக்கூ கவிதையின் பண்புகள்[தொகு]

சிறிய வடிவம்,படிமக் காட்சி, விலங்குகளின் செயல்கள்மூலம் வாழ்க்கை வினேதங்களை வெளிப்படுத்துவது,காட்சகளில் வாழ்க்கைத் தத்துவத்தை விளக்குதல் போன்ற பண்புகைளக் கொண்டதாக குக்கூ கவிதை விளங்குகிறது.இது மூன்று வரி என்ற அடியளவைப் பின்பற்றவில்லை.எடுத்துக் கொண்ட பொருளுக்கேற்ப கக்கூவின் வரிகள் கூடுதலாகவோ குறைவாகவோ அமைந்திருக்கும்."இவற்றிற்கு ஜப்பானிய உடையும் இல்லை.நடையும் இல்லை.மூன்றுவரிச்சட்டங்களும் இல்லை,தமிழ்ச்சாயல்,தமிழ்க்காற்று இவை ஹைக்கூ என்று கூவுமா?என்ன?குக்கூ என்றுதான் கூவும்"என கவிஞர்பாலா குக்கூ கவிதை பற்றி விளக்குகிறார்.இவரது விளக்கம் குக்கூ என்பதைத் தமிழ்க்கவிதை வடிவமாக நிைலநிறுத்துகிறது எனலாம்.

சான்றுகள்[தொகு]

"கோழியும் சேவலும்

குப்பையைக் கிளறும்

விடியற் காலையில்

கண்மூடிக்கிடக்கும்

ஊர்நாய் ஒரு மூலையில்

இரவெல்லாம் கரைத்த அசதியில்" என்ற கவிதை மீராவினுடையது.

"கூடல்நகரில்

கூட்டம்

கூட்டம் கூட்டம்

கூட்டம் கூட்டம் கூட்டம்"

பார்வை நுல்கள்[தொகு]

தமிழ் இலக்கிய வரலாறு

முனைவர் சி.சேதுராமன்

நியுசெஞ்சுரி புத்தக நிலையம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குக்கூ_கவிதை&oldid=2377104" இருந்து மீள்விக்கப்பட்டது