குஃப்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

[1]

குஃப்ரி,இந்தியா குஃப்ரி ஹிமாச்சல் பிரதேசம், சிம்லா மாவட்டத்தில் அமைந்துள்ள அழகு கொஞ்சும் மலை வாழிடமாகும். இது சிம்லாவிலிருந்து 20 கி.மீ தூரத்தில்,தேசிய நெடுஞ்சாலை எண் 22 ல் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 2,630மீ (8630 அடி உயரத்தில்) அமைந்துள்ளது. 2001,மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மொத்த மக்கள் தொகை 1,148 ஆகும். அலுவலக மொழி ஹிந்தி ஆகும்.

    குஃப்ரி என்னும் சொல் குஃபர் என்ற சொல்லிலிருந்து வந்ததாகும். குஃபர் என்றால் வட்டார மொழி வழக்கில் ஏரி என்று பொருள்படும். இங்கு அரிய வகை மறிமான்,பூனை,ஹிமாச்சல் பிரதேசத்தின் மாநிலப் பறவையான மோனல் போன்றவைகள் கண்ணுக்கு விருந்தளிக்கும். மேலும்,இங்கு குளிர் காலத்தில் உருளைக் கிழங்கு பயிரிடப்படுகிறது.

புவியியல் அமைப்பு 31.10`வ 77.25`கி (8607 அடி)

வரலாறு

 குஃப்ரி மற்றும் சிம்லாவை சுற்றியுள்ள பகுதிகள் நேபாள அரசுக்கு சொந்தமானவையாக இருந்தது .பின்னர் சகவுலி உடன்படிக்கையின் படி, அது பிரித்தானிய அரசுக்கு விட்டுக்கொடுக்கப்பட்டது. மேலு குஃப்ரியை சுற்றியுள்ள பகுதிகளை  பிரித்தானிய அரசு1819ல் கண்டறிந்து வெளியுலகத்திற்கு கொண்டு வந்தது.
  1. "குஃப்ரி,இந்தியா". பார்க்கப்பட்ட நாள் 7 சூலை 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குஃப்ரி&oldid=3924855" இலிருந்து மீள்விக்கப்பட்டது