கீழ் பெயர்ஸ் நீர்த்தேக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கீழ் பெயர்ஸ் நீர்த்தேக்கம், சிங்கப்பூரின் இரண்டாம் பெரிய நீர்தேக்கமாகும். இதன் பரப்பளவு 6 ஹெக்டேர் ஆகும். இதன் மொத்த கொள்ளளவு 27.8 மில்லியன் கண அடி ஆகும். இந்த இடத்தை சுற்றி அழகிய காடு உள்ளது. இதுவே இந்த இடத்தின் நீர்பிடிப்பு பகுதியாகவும் உள்ளது.

வரலாறு[தொகு]

ராபர்ட் பெயர்ஸ் என்ற பொறியாளரின் நினைவாக, கல்லாங் ஆற்றை மறித்து 1910ஆம் ஆண்டு இந்த நீர்த்தேக்கம் கட்டப்பட்டது. 1970ஆம் ஆண்டு அதிகரித்து வந்த நீர் தேவையை மனதில் கொண்டு மேலும் ஒரு நீர்த்தேக்கம் இங்கு கட்டபட்டது. கீழ் பெயர்ஸ் நீர்த்தேக்கம், என்று பெயர் சூட்டப்பட்டு அதிகாரப்பூர்வமாக 1977, 27 பிப்ரவரி அன்று அப்போதைய பிரதமர் திரு. லி குவான் யூ , அவர்களால் திறந்து வைக்கப் பட்டது.

மேற்கோள்கள்[தொகு]