கீழ் செலேடர் நீர்த்தேக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கீழ் செலேடர் நீர்த்தேக்கம், சிங்கப்பூரின் வடகிழக்கே அமைந்துள்ள ஒரு இயற்கையான நீர்தேக்கமாகும். இதன் பரப்பளவு 3.6 சதுர கிலோமீட்டர் ஆகும். இது யூ சூன் நகரத்தின் கிழக்கே உள்ளது. இதன் கொள்ளளவு 12.8 மில்லியன் கன சதுரமாகும். இதன் ஆழம் 2 மீட்டர் தொடங்கி அதிகபட்சமாக 5.5 மீட்டராகும். இதன் கரைகளின் நீளம் 14.3 கிலோமீட்டர்.

வரலாறு[தொகு]

முன்பு செலேடர் நீர்த்தேக்கம் என்று அறியப்பட்ட இந்த நீர்த்தேக்கம், 1986 ஆம் ஆண்டு செலேடர் ஆற்றை தடுத்தும் கீழ் செலேடர் நீர்த்தேக்கம் கட்டிமுடிக்கப்பட்ட பின்னர் மேல் செலேடர் நீர்த்தேக்கம் என்று அழைக்கப்பட்டது. 1966 முதல் 1972 வரை இங்கு இயங்கிவந்த மணல் குவாரிகளை மூடிய பின்பு இங்கு வேலைகள் தொடங்கின. இங்கிருந்து எடுக்கப்பட்ட மண், கிழக்கு கடற்கரைப் பகுதிகளின் விரிவாக்கத்திற்கு பயன்படுத்தப் பட்டது.

இன்று[தொகு]

இன்று இந்த நீர்தேக்கமும் அதை சார்ந்த பூங்காவும், அதிகமான மக்களை கவரும் இடங்களாக இருக்கிறது. இங்குள்ள நீர்விலயட்டு அரங்கங்கலுக்கி அதிகமானோர் வருகின்றனர். மீன் பிடித்தலில் விருப்பமுல்லோரும் இங்கு வருகின்றனர் .

மேற்கோள்கள்[தொகு]